அட ஆமாங்க ஜியோவுக்கு போட்டியாக இப்போ அனைத்து தொலைபேசி நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆப்பர்களை அள்ளி வீசி வருகிறது.
ஏன் அனைத்து நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக ஆப்பர்களை தருகிறது என்றால், ஜியோவின் வருகையால் ஒரு சில நிறுவனங்கள் இருந்த இடம் கூட தெரியாமல் போன கதையும் இருக்கிறது.
இதனால் அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அளித்து வருகின்றனர்.
ஜியோவுக்கு போட்டியாக பிஎஸ்என்எல், டாடா டோகோமோ, வோடாபோன், ஏர்டெல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ளும் வகையிலும், மற்ற நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் புதிய பிரீப்பெய்டு திட்டத்தில் குறைந்த கட்டணத்தில் புதிய ஆப்பர்களை அளித்து வருகின்றன.
ஐடியாவின் ஆப்பர் என்ன?
ஐடியா நிறுவனம் தற்போது ரூ.75க்கு பிரீப்பெய்டு சலுகை அறிவித்துள்ளது.
இதில் 300 நிமிடங்கள் வாய்ஸ் காலும், 2ஜி முதல் 4ஜி வரை 1 ஜிபி டேட்டாவும், 100 எஸ்எம்எஸ்களும் 28 நாட்களுக்கு வழங்குகிறது.
போட்டியிடும் நிறுவனத்திற்கு எதிராக ஐடியாவின் சலுகைகள்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அளவில்லா வாய்ஸ் கால்களை வழங்குகிறது.
இதற்கு எதிராக தற்போது ரூ.75 திட்டத்தில் பிரீப்பெய்டு வாடிக்கையாளர்கள் 18000 உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் வினாடிகளை ஐடியா நிறுவனம் வழங்குகிறது.
ஐடியாவின் இலவச அழைப்பு:
ஐடியா வழங்கும் அளவில்லா ரூ.129க்கு ரீசார்ஜ் செய்தால், தினமும் 250 நிமிடம் வாய்ஸ்கால்களில் இலவசமாக பேசலாம்.
மேலும், ஆயிரம் நிமிடங்கள் வாரத்திற்கும் அளவில்லாமல் வாய்ஸ் கால்கள் பேசி மகிழலாம். இத்திட்டம் 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
ரூ.75-க்கு சலுகை பெரும் வட்டாரங்கள்:
ஆந்திரா, தெலுங்கான, கேரளா தொலை தொடர்பு வட்டாரங்களை சேர்ந்த ஐடியா வாடிக்கையாளர்கள் ரூ.75க்கான சலுகையை அனுபவிக்க முடியும்.
மேலும், தமிழ்நாடு, கர்நாடக தொலைபேசி வட்டார வாடிக்கையாளர்களுக்கு புதிய ஆப்பர் காத்து இருக்கின்றனர்.
மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.