வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆதார் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி?

Updated On: August 26, 2023 9:12 AM
Follow Us:
How to Download Aadhar Card Online in Tamil
---Advertisement---
Advertisement

How to Download Aadhar Card Online in Tamil

நமது இந்தியாவின் முக முக்கியமான ஆவணம் ஆதார் கார்டு என்று சொல்லலாம். இப்போது அரசு வழங்கக்கூடிய அனைத்து சலுகைகளை பெறுவதற்கும், அரசு சார்ந்த சேவைகளை பெறுவதற்கும் அவசியமாக தேவைப்படுகிறது. இத்தகைய ஆதார் கார்டில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் முன்பெல்லாம் ஆதார் மையங்களுக்கு தான் செல்ல வேண்டியதாக இருந்தது. ஆனால் இன்று அப்படியில்லை. ஆன்லைனிலேயே பல சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் விஷயம் ஆன்லைனில் ஆதார் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி? என்பதை தான். சரி வாங்க ஆன்லைன் மூலம் ஆதார் கார்டு டவுன்லோடு செய்யும் முறையை இப்பொழுது பார்க்கலாம்.

ஆதார் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி?

ஸ்டேப்: 1

ஆதாரின் அதிகாரப்பூர்வ uidai.gov.in என்ற முகவரியில் செல்ல வேண்டும்.

ஸ்டேப்: 2

அதில் Get Aadhaar என்ற சேவையில் Download Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப்: 3

அதன் பின்னர் நீங்கள் UID, EID அல்லது VID ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஸ்டேப்: 4

Send OTP என்பதை கிளிக் செய்தால் உங்களது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும்.

ஸ்டேப்: 5

அதைப் பதிவிட்டு Verify and Download என்பதை கிளிக் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஸ்டேப்: 6

உடனடியாக உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டு PDF வடிவத்தில் உங்களது கம்ப்யூட்டரில் டவுன்லோடு ஆகிவிடும்.

ஸ்டேப்: 7

இந்த PDF காப்பியை ஓப்பன் செய்வதற்கு நான்கு இலக்கு பாஸ்வேர்டு கேட்கும். அதில் உங்களது பெயரின் முதல் நான்கு எழுத்துகளை கேப்பிட்டல் லெட்டரிலும், அதைத் தொடர்ந்து உங்களது பிறந்த தேதிக்கான வருடத்தையும் பதிவிட வேண்டும்.

ஸ்டேப்: 8

mAadhaar மொபைல் ஆப் மூலமாகவும் இதே முறையைப் பயன்படுத்தி நீங்கள் உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை டவுன்லோடு செய்யலாம்.

ஆன்லைனில் எப்படி ஆதார் நம்பரை தெரிந்து கொள்வது?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now