இனி டைரிமில்க் கவரை தூக்கிபோடாதிங்க, ஜியோ வழங்குகிறது இலவசமா 1 ஜிபி டேட்டா !!!

ஜியோ

ஜியோவின் அறிவிப்பு:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம்படுத்திய முதல் நாளில் இருந்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை வழங்கிக்கொண்டே வருகிறது.

இந்த நிறுவனம் இந்தியாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே அதிகளவு வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்து கொண்டது.

இருப்பினும் நிறுவனத்தின் சலுகையால் பல்வேறு தொலைபேசி நிறுவனங்களும் கதிகலங்கியுள்ளன.

இந்தியா முழுக்கவும் இலவச ரோமிங், காலர் டோன்களுக்கு கட்டணமும் கிடையாது.

இலவசமாக மிஸ்டுகால் அலர்ட், 100 எஸ்எம்எஸ் ப்ரீ, மேலும் வரம்பற்ற அழைப்புகள் அனைத்து போன் நிறுவனங்களுக்கும் என பல்வேறு சலுகைகளை கொடுத்து வருகின்றது ஜியோ நிறுவனம்.

மேலும் பல்வேறு தொலைபேசி நிறுவனங்களுக்கும் போட்டியாகவும், அதிக வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும் மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் 4 ஜியில் 1 ஜிபி டேட்டாவை ஜியோ நிறுவனம் வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜியோவின் இலவச 1 ஜிபி டேட்டாவை பெறும் முறை:

ஜியோவின் 1 ஜிபி டேட்டாவை டைரி மில்க் சாக்லேட் காகிதம் இருந்தாலே இலவசமாக பெற முடியும்.

இந்த 1 ஜிபி டேட்டாவை எவ்வாறு பெறுவது என்றால் ரூ.10 முதல் தொடங்கும் டைரி மில்க் சாக்லேட் ரேப்பரை ஏதாவது ஒன்றை வாங்கி கொள்ள வேண்டும்.

பிறகு நமது ஆன்ட்ராய்டு மொபையில் போனில் உள்ள மை ஜியோ ஆப்பை ஒப்பன் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு மை ஜியோ ஆப்பில் திஸ் ரேப்பர் ஹேஸ் 1 ஜிபி டேட்டா இன்சைடு இட் என்று கொடுக்கப்பட்டு இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு ஆப்பில் தெரிவித்துள்ளபடி இப்போது பங்கேறுங்கள் என்று கொடுக்கப்பட்டு இருக்கும் அதையும் கிளிக் செய்ய வேண்டும்.

அப்போது மேகராவை திறக்க அனுமதி கொடுக்கவும் என்று கேட்கும் பிறகு அனுமதி கொடுத்து உள்ளே சென்று திறந்து, டைரிமில்க் சாக்லேட்டை போட்டோ எடுத்து அப்லோடு செய்ய வேண்டும்.

பிறகு 1 ஜிபி டேட்டா பெற்றத்திற்கான அறிவிப்பும் உடனே ஸ்கிரீனில் தெரிவிக்கும்.

மேலும் இந்த ஒன் ஜிபி டேட்டாவை பிறருக்கும் தானமாக வழங்கவும் முடியும்.

நாமே வைத்துக் கொள்வதாக இருந்தாலும் கீப் 1 ஜிபி டேட்டா என்று இருக்கும் அதை கிளிக் செய்தும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE