உண்மைதான்… பாதி விலையில் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்!

சாம்சங்

சாம்சங் கேலக்ஸி எஸ் 8+ ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு இந்திய சந்தையில் ரூ. 64,900/- என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

பின்பு இரு முறை இந்த ஸ்மார்ட்போன் மீது விலை குறைக்கப்பட்டது.

இருப்பினும் மூன்றாவது முறையாக ரூ. 12,000/- குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் இப்பொது சந்தையில் ரூ.39,990-க்கு விற்கப்படுகிறது.

அனைத்து ஆஃப்லைன் விற்பனை மையங்கள், சாம்சங் ஷாப், ஆன்லைன் தளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் விரைவில் புதிய விலை மாற்றம் கொண்டு வரப்படும் என தெரிகிறது.

விலை குறைப்போடு பேடிஎம் மூலம் வாங்குவோருக்கு ரூ.8,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE