உலகின் முதன்முதல் 5ஜி மோடம் !!!

Samsung

சாம்சங் நிறுவனம் சமீபகாலமாக புதிய புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. இந்த சாம்சங் நிறுவனத்தின் முயற்சிகள் அனைத்துமே மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

தற்போது சாம்சங் நிறுவனம் உலகின் முதல் முதலாக 5ஜி மோடம் அறிமுகம் செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மக்களிடம் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்த தொழில்நுட்பம் குறிப்பாக அனைத்துத் தரப்பிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்மாட்போன் நிறுவனமான சாம்சங் உலகின் முதல் 5ஜி மோடம் அறிமுகம் செய்துள்ளது. எக்ஸிநோஸ் 5100 5ஜி மோடம் அனைத்துவித 5ஜி தரத்துக்கும் உகந்தது என சாம்சங் தெரிவித்துள்ளது.

கூட்டணிகளுடன்:

இந்த சாம்சங் நிறுவனத்தின் புதிய 5ஜி மொபைல் பரிமாற்றத்தை சந்தைக்கு கொண்டுவர தற்போது வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து யோசனை மற்றும் புதிய சேவைகளை செய்ய தற்போது இணைந்து பணியாற்றி வருகிறது.

ஓவர் தி ஏர் (OTA):

சாம்சங் நிறுவனம் ஓவர் தி ஏர் (OTA) 5ஜி-யின் NR. டேட்டா கால் சோதனை வயர்லெஸ் சூழலில் 5ஜி பேஸ் ஸ்டேஷன் மற்றும் எக்ஸிநோஸ் மோடம் 5100 பொருத்தப்பட்ட பயனர் பயன்படுத்தக்கூடிய 5ஜி சாதனத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக சாம்சங் தெரிவித்துள்ளது.

சப்போர்டிங்:

எக்ஸிநோஸ் 5100 மோடம் 3ஜிபிபியின் 5ஜி தரத்திற்கு உகந்த எம்.எம். அலைக்கற்றை ஸ்பெக்ட்ரம்கள் மற்றும் 2ஜி GSM/CDMA, 3ஜி WCDMA, TD-SCDMA, HSPA மற்றும் 4ஜி எல்.டி.இ. போன்றவற்றை ஒற்றை சிப் மூலம் சப்போர்ட் செய்கிறது.

அதிக வேகம் கொண்டது:

புதிய மோடம் 5ஜி-யின் 6 ஜிகாஹெர்ட்ஸ் செட்டிங் மற்றும் எம்.எம். வேவ் செட்டிங்கில் நொடிக்கு 6ஜிபி செட்டிங்கில் அதிகபட்சம் 2 ஜிபி வரையிலான டவுன்லின்க் வேகம் வழங்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது.

இது தற்போதைய டேட்டா வேகங்களை விட 1.7 மடங்கு மற்றும் ஐந்து மடங்கு வரை அதிகம் ஆகும்.

2018 இறுதியில்:

இந்த புதிய 5ஜி மோடம் செயல்பாடுகள் 2018-ம் ஆண்டு இறுதியில் முடிவடையும் என்றும், எனவே 2018 -ம் ஆண்டு இறுதியில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

 

SHARE