வாழ்க்கையே ஒரு கேள்விக் குறிதான், மணிதனாக பிறந்த அனைவருக்கும் பிறப்பு என்பது எப்படி உண்மையோ அதே போல் இறப்பும் என்பதும் உண்மை தான். எனவே ஆயுள் காப்பீடு எடுப்பது ஒரு கடைமையாகும். உங்களை நம்பி குடும்பம் உள்ளது என்றால் உங்களுக்கு பொருப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆயுள் காப்பிட்டு எடுப்பது சாதாரண நிதி கொள்கை முடிவு மட்டும் அல்ல இது உணர்ச்சிப்பூர்வமான ஒன்று ஆகும். சரி இங்கு நாம் எப்படி ஆயுள் காப்பீடுகளை பெறலாம் என்பதைப் பார்ப்போம்.
உங்கள் குடும்பத்தை பாதுகாக்க:
நிங்கள் நன்றாக வாழ்ந்து வரும் போது, திடீர் என்று நிங்கள் இறந்து விட்டால், உங்கள் குடும்பம் மிகவும் மன உளைச்சல் எதிர்கொள்ள நேரிடும். அப்போது உங்கள் குடம்பம் நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்ற இயலும்.
உங்கள் பிள்ளைகள் சொந்த காலில் நிற்கச் சிறிது காலம் எடுக்குமானால் இடைப்பட்ட காலத்தை நிறைவு செய்ய காப்பீடு திட்டங்கள் உதவும்.
கடனை நிர்வகிக்க:
உங்கள் இறப்பிற்குப் பிறகு, நீங்கள் வாங்கிய கடனை செலுத்தும் நிலைக்கு, உங்கள் குடும்பம் தள்ளப்பட்டால். அப்போது நீங்கள் வாங்கிய கடன் சுமையை உங்களை நம்பி இருந்தவர்களின் மீது தள்ளாமல் ஆயுல் காப்பீடு திட்டங்களின் மூலம் செலுத்தும் படி செய்யலாம்.
குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம்:
நீங்கள் நல்ல நிலையில் இருக்கும் போதே உங்களின் குழந்தையின் கல்விக்குச் சேமிப்பது நல்லது. அதற்க்கு நீங்கள் இன்று முதல் திட்டம் தீட்டச் செய்யவது நல்லது. நாளுக்கு நாள் அனைத்து கல்வியின் விலை உயர்ந்துக் கொண்டே இருக்கிறது.
உங்கள் ஆயுள் காப்பீடு திட்டம் உங்கள் குழந்தையின் கல்வியை உறுதி செய்யும். மேலும் மிச்ச பணத்தை வைத்து உங்கள் குழந்தையின் திருமண செலவுகளையும் சரி செய்ய இயலும்.
நெடுந்தூர இலக்குகளைச் சந்திக்க:
நீண்ட நாட்களுக்காக மாதம் அல்லது வருடத்திர்க்கு திட்டங்களில் மூதலிடு செய்து வருவது நல்லது. சில காப்பீடுகள் இரட்டை பயன்களை தரக்கூடியவை, உங்கள் இறப்பிற்க்கான காப்பீடு மட்டும் இல்லாமல் சில காலத்திற்க்கு பிறகு லாபத்தையும் அளிக்கும் மற்றும் இது ஈவுத்தொகையாக உங்களுக்குக் கிடைக்கும். அந்த பணத்தை உங்கள் ஓய்வூதிய காலத்திற்க்கு ஏற்றார் போல மூதலிடு செய்யலாம்.
வரிச் சலுகைகள்:
வரியைச் சேமிக்கும் காப்பீடு திட்டம் உதவும். இதில் நீங்கள் செலுத்தும் காப்பீடு ப்ரிமியத்தில் 1.5 லட்சம் ரூபாய் வரை வரீச் சலுகை பெற இயலும். வருமான வரி சட்டத்தின் பிரிவு 80 சி-ன் கீழ் இது சாத்தியப்படும்.
இறந்த பிறகு உங்கள் குடும்பம் பெறும் பணத்திற்க்கும் பிரிவு 10-ன் கீழ் வரி விலக்கு உண்டு. நீண்ட காலத்திற்க்கு முதலீடு செய்து வரியைச் சேமிக்க காப்பீடு ஒரு வரப்பிரசாதமாகும்.
மன அமைதி:
இறப்பு என்பது எல்லோருக்கம் உண்டு. ஆனால் எப்போது என்று சொல்ல முடியாது. ஏதேனும் பெரிய விபத்து அல்லது உடல் நலக்குறைவினால் உயிரை விட நேரலாம்.
ஆயுள் காப்பீடு திட்டங்களால் உங்கள் குடுபத்தை நிதி நெருக்கடியில் இருந்து மொத்தமாகக் காப்பாற்றலாம். உங்கள் குடும்பத்தை பாதுகாக்கத் தேவையான ஒன்று இது. ஆயுள் காப்பீடு ஒன்று உங்கள் பெயரில் இருந்தால் மன அமைதியுடன் வாழலாம்.
நன்கொடை செய்யலாம்:
ஒரு வேலைக் காப்பீடு திட்டத்தின் ஆயுட்காலம் முழுவதும் எந்த அசம்பாவிதமும் ஏற்ப்படவில்லை என்றால் உங்களுக்கு மிஞ்சியதை நன்கொடை அளிப்பது, தொண்டு செய்வது போன்றவற்றைச் செய்யலாம்.