அசர வைக்கும் எதிர்கால தொழில்நுட்பங்கள்..!

Advertisement

உலகை மாற்றப் போகும் எதிர்கால தொழில்நுட்பம்..!

டெக்னாலஜி என்று சொன்னவுடன் பொதுவாக அனைவரது நினைவில் வருவது செல்போன், டிவி, கம்ப்யூட்டர், ஐ பெட் போன்ற சாதனங்கள் தான் முதலில் நமக்கு நினைவுரிக்கு வரும். டெக்னாலஜி என்பது எல்லா காலகட்டத்திலும் இருந்துள்ளது. இருப்பினும் அவை ஒவ்வொரு காலகட்டத்திற்கு மாறுபடும். 20-வது வருடங்களுக்கு முன் நாம் யாரிடமாவது நாம் இருக்கும் இடத்திற்கு போனில் ஆர்டர் செய்வதன் மூலம் உணவுகளை வர வைக்க முடியும் என்று சொல்லி இருந்தோம் என்றால் அனைவரும் சிரித்திருப்பார்கள். ஆனால் தற்பொழுது நாம் போனில் ஆர்டர் செத்தவுடனேயே உணவுகள் வருகின்றன. முன்பெல்லாம் ஏதாவது ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் வழி காட்டுவதற்கு யாரையாவது அழைத்துக்கொண்டு செல்வோம். ஆனால் இப்போது அப்படி இல்லை கூகிள் மேப் தொழில்நுட்பம் மூலம் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு மிக எளிதாக சென்றுவிட முடிகிறது. இது மாதிரி ஒவ்வொரு நாளும் இந்த உலகில் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது. இப்போ இருக்கின்ற அறிவியல் தொழில்நுட்பங்களை தான் எதிர்காலத்திலும் நாம் பயன்படுத்துவோம் என்று சொல்ல முடியாது. ஏன் என்றால் எதிர்காலத்தில் தற்பொழுது உள்ள தொழில்நுட்பங்களை விட மிகவும் சிறந்த தொழில்நுட்பங்களை தான் பயன்படுத்துவோம். சரி வாங்க இந்த பதிவில் நாம் அசர வைக்கும் எதிர்கால தொழில்நுட்பங்கள் பற்றி பார்க்கலாம்.

Artificial Intelligence:

எதிர்காலத்தில் கண்டிப்பாக வரக்கூடிய ஒரு தொழில்நுட்பம் என்றால் Artificial Intelligence என்று சொல்லலாம். இந்த Artificial Intelligence என்பது செயற்கை நுண்ணறிவு ஆகும். இந்த தொழில் நுட்பத்தை வைத்து நாம் என்ன வேண்டுமெனாலும் செய்ய முடியுமாம். Artificial Intelligence என்பது வெறும் ரோபோ மட்டும் இல்லை இப்பொழுது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் அலெக்ஸ்சா, கூகிள் வாய்ஸ் அனைத்தும் Artificial Intelligence-ஐ சேர்த்தது என்றும் சொல்லலாம்.

இவற்றை சுலபமாக எப்படி சொல்லலாம் என்றால் மனிதர்களிடம் இருந்து வாய்ஸ் மூலமாகவோ, கோடிங் மூலமாகவோ மிஷ்கினுக்கு இன்புட் கொடுத்து அந்த மிஷின் அதனை புரிந்து கொண்டு அதற்கு சரியான output கொடுக்கிறது என்றால் அதனை Artificial Intelligence ஆகும். இப்படிப்பட்ட தொழில்நுட்பம் தற்பொழுது அனைத்து இடத்திற்கும் வர தொடங்கிவிட்டது. இப்போது எல்லாம் நிறையபேர் மனிதர்களிடம் ஆலோசனை கேட்பதைவிட, ரோபோக்களிடம் தான் ஆலோசனை பெறுகின்றன. ஏன் அப்படினா ரோபோ சரியான ஆலோசனையை தருகிறது என்பதனால்.

ரோபோக்களுக்கு எதாவது பிரச்சனையை என்றால் அதனை நாம் மாற்றி வேறு ஒரு ரோபோவை உடனே உபயோகிக்க முடியும். ஆனால் மனிதர்களுக்கு ஏதாவது பிரச்சனை அல்லது உயிருக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படும் என்ற விதத்தில் அங்கு இதுபோன்ற Artificial Intelligence தொழில்நுட்பம் பயன்படுத்துகின்ற. அது மட்டும் இல்லாமல் மெடிக்கல், இண்டஸ்ட்ரி போன்ற பல இடங்களில் ரோபோக்கள் முளைக்க ஆரம்பித்துவிட்டது.


Self Driving Cars:

self driving cars என்று சொன்னதும் டெஸ்லா (Tesla) கார் தன நினைவிற்கு வரும். டெஸ்லா நிறுவனம் மட்டும் தான் self driving cars-ஐ  தயார் செய்கின்றார்களா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்னும் நிறைய நிறுவங்கள் self driving car-ஐ தயாரிக்கின்றார்கள் மற்றும் அதனை பற்றி ஆலோசனை செத்துக்கொண்டும் உள்ளனர். இருப்பினும் பல நாடுகளில் இந்த self driving car டெக்னாலஜி இன்னும் சுத்தமாக வரவில்லை என்றாலும். அமெரிக்காவில் இந்த self driving car தொழில்நுட்பம் ரொம்ப அட்வான்டேஜ் ஸ்டேஜிக்கு சென்றுவிட்டது. குறிப்பக 1500 மேற்பட்ட கர் ஒடோகொண்டு உள்ளதாம்.

இந்த self driving car எதுக்காக பயன்படுத்துகின்றன அப்படின தற்பொழுது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆகவே அவற்றை ரிப்லெஸ் செய்வதற்காக நிறைய எலக்ட்ரிக் வாகனகள் உருவாக்கப்பட உள்ளது. அதுமட்டும் விபத்துகளை தவிர்க்கவும் இந்த அம்சத்தை தயார் இந்த self driving cars எதிர்காலத்தில் வரப்போகிறது.


Space Travel:

பொதுவாக பலருக்கு space travel செய்ய அதிக ஆசை இருக்கும். ஆனால் அனைவராலும் ஸ்பெஸில் ட்ராவல் செய்திட முடியாது. இருப்பினும் எதிர்காலத்தில் அது கண்டிப்பாக சாத்தியம் ஆகலாம். இந்த Space ட்ராவெளுக்காக நிறைய நிறுவங்கள் டூரிஷ்டு வெறியில் மாதிரி தயார் செய்துகொண்டு இருக்கின்றன.

இன்னும் நிறைய தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் வரப்போகிறது நாம் அதனை காண உயிரோடு இருந்தால் நிச்சயம் பார்க்கலாம் அதுவரை காத்திருப்போம் நன்றி

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 வெறும் ரூ.10,000-க்கும் உலகின் முதல் 11ஜிபி ரேம் கொண்ட டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போன் அறிமுகம்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement