என்ன ஆண்ட்ராய்டுக்கு goodbye யா? அப்போ அடுத்து என்ன?

Advertisement

இந்தியா மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளிலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அதிகம் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக இந்த இயங்குதளத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் கூட மிக எளிமையாக பயன்படுத்துவார்கள். மேலும் மக்கள் ஸ்மார்ட்போனை எளிமையாக இயக்குவதற்கு இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளம் பெரிதும் உதவுகிறது என்றுதான் கூறவேண்டும்.

கடந்த 2008-ம் ஆண்டு தான் ஆண்ட்ராய்டின் முதல் அணிவகுப்பு தொடங்கப்பட்டது, பின்பு ஓப்போன் சோர்ஸ் மென்பொருள்களின் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியைக் கண்டது இந்த இயங்குதளம். ஆண்ட்ராய்டு வருவதற்குமுன்பு ஐஒஎஸ் மற்றும் விண்டோஸ் போன்ற இயங்குதளங்கள் மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்பட்டது.

கூகிள் நிறுவனம்:

குறிப்பாக ஐஒஎஸ் மற்றும் விண்டோஸ் போன்ற இயங்குதளங்களுக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை உருவாக்கியது.

இதன் காரணமாக பல மொபைல் நிறுவனங்கள் இந்த கூகுள் ஆண்ட்ராய்டு உடன் இணைந்து பல்வேறு ஸ்மாட்போன்களை குறைந்த விலையில் விற்பனை செய்தது.

ஆண்ட்ராய்டு இயங்குதளம் வருவதற்கு முன்பு மொபைல் போன்களின் விலை சற்று அதிகமாகத்தான் இருந்தது.

2 பில்லியன் மக்கள்:

இந்த நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்த அறிக்கையில் 2பில்லியன் மக்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்தது.

இந்த நிறுவனம் இப்போது தந்த தகவல் என்னவென்றால் இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறது கூகுள்.

ஆண்ட்ராய்டு:

இந்த இயங்குதளத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லவே ஃபியூஷியா(Fuchsia)-வை தற்போது உருவாக்கியிருக்கிறது. மேலும் இந்த தகவல் உறுதிப்படுத்த முடியாத தகவலாக இருந்துவந்தது, ஆனால் ஃபியூஷியா கோட் விதி முறையை கூகுள் நிறுவனம் இணையத்தில் பதிவேற்றம் செய்தது மூலமாக இந்த தகவல் உறுதிபடுத்தப்பட்டது.

மேலும் ஃபியூஷியா பற்றி பல்வேறு செய்திகள் இப்போது இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

ஃபியூஷியா(Fuchsia) :

ஆண்ட்ராய்டு இயங்குதளம் தற்சமயம் வரை ஸ்மார்ட்போன், டிவி, ஸ்பீக்கர மற்றும் ரோபோ போன்ற பல்வேறு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களில் அருமையாக பயன்படுகிறது, இந்த இயங்குதளம்.

மேலும் விரைவில் வரும் ஃபியூஷியா இப்போது இருக்கும் ஆண்ட்ராய்டு விட பல்வேறு திறமையுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் குரல் மூலமாக இடப்படும் கட்டளைகளை மிக அருமையாக செயல்படுத்தும் இந்த ஃபியூஷியா .

சுந்தர் பிச்சை:

இந்த ஃபியூஷியா தோற்றம் சற்று வித்தியசமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, பின்பு சிறந்த பாதுகாப்பு மற்றும் எளிமையாக பயன்படுத்தும் விதமாக ஃபியூஷியா உருவாக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஃபியூஷியா தொடர்பான திட்ட வரைபடத்தில் தற்சமயம் வரையில் சுந்தர் பிச்சை கையெழுத்திடவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. இருந்தபோதிலும் ஃபியூஷியா பற்றிய தகவலை விரைவில் கூகுள் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை இந்த இயங்குதளம் வந்தால் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் உபயோகத்திற்கு வரும் என ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement