குற்றம் நடக்கும் முன் குற்றவாளியை கண்டுபிடிக்கலாமா ? ஆச்சரிய தகவல்

cctv-camera

முக அடையாளம் காணும் ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் என்ற தொழில்நுட்பம் தற்போது காவல்துறையினர்களுக்கு குற்றவாளிகளை கண்டறிவதற்கு மிகவும் உதவுகிறது.

இதுகுறித்து டாக்டர் மைக்கேல் கொசின்ஸ்கி என்பவர் கூறியபோது, முக அடையாளத்தை கண்டுகொள்ளும் இந்த டெக்னாலஜி, ஒருநாள் சிசிடிவி கேமிராவில் பதிவாகும் பொதுமக்களின் முகங்களில் இருந்து குற்றவாளிகளை தனியாக பிரித்தெடுக்க பயன்படும் என்று கூறியுள்ளார்.

இவர் கடந்த ஆண்டு பாலினத்தை கண்டுபிடிக்கும் ஏஐ கண்டுபிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த தொழில்நுட்பம் தனிப்பட்ட நபர்களை காப்பாற்ற  நிச்சயம் பயன்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் இவர் ஒருவரது புகைப்படத்தை வைத்து அந்த நபரின் அனைத்து விவரங்களையும் கம்ப்யூட்டர் புரோக்ராம் மூலம் கண்டறிய முடியும் என்ற ஆய்வை தற்போது செய்து வருகிறார் டாக்டர் மைக்கேல் கொசின்ஸ்கி.

கார்டியன்:

கார்டியன் என்ற ஊடகத்திடம் இதுகுறித்து பேசிய மைக்கேல், பல்வேறு டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் காரணமாக ஏற்படும் முகபாவங்களை மாற்றுவதன் மூலம் இந்த தொழில்நுட்பம் வேலை செய்யும் என்று கூறினார்.

குற்றவாளிகள் யார் யார் என்பது எங்களுக்கு இந்த டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் மூலம் தெரிய வரும் என்றும், இதன்மூலம் குற்றம் நடப்பதற்கு முன்பே தடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், முக அம்சங்களில் குற்ற உணர்வை தெரிந்து கொள்ள, இந்த டெக்னாலஜி தொடர்பு கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான முகங்களை கம்ப்யூட்டர் பார்த்தாலும் அந்த ஒரு குறிப்பிட்ட குற்றம் செய்யக்கூடிய நபரை இதன் மூலம் எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிசிடிவி:

எதிர்காலத்தில் சிசிடிவி கேமராவுக்கு பதிலாக ஏஜ ஃபேஸ் ரீடிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யார் குற்றவாளி என்பதை கண்டறிந்து சமூக அமைதிக்கு இந்த தொழில்நுட்பம் பயன்படும் என்றும் மைக்கேல் கூறுகிறார்.

விதமான பிரச்சனைக்கு:

இந்த உலகில் பிறந்த அனைவருக்கும், ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கும் அவற்றையும் இந்த தொழில்நுட்பத்தில் எளிதில் கண்டறியலாம்.

அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆரமித்து விட்டதால் இந்த தொழில்நுட்பத்தை சிறந்த ஒன்றாக கூறமுடியும்.

தனியாக பிரித்தெடுக்கும் முகங்கள்:

இந்த தொழில்நுட்பத்தை வைத்து ஒருவருடைய முகம் சாதாரண முகமா அல்லது ஓரினசேர்க்கை உள்ள முகமா என்று கண்டறிய முடியும்.

இந்த ஏஜ தொழில்நுட்பத்தில் எத்தனை முகங்களை பார்த்தாலும் தனியாக பிரித்தெடுக்கும் முகங்கள் குறித்து பொதுவாக பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது
என்று டாக்டர் கொசின்ஸ்கி தெரிவித்துள்ளார்.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE