கூகுள் பே பயனாளர்களுக்கு புதிய அப்டேட்!

Advertisement

கூகுள் பே மொபைல் செயலியில் புதிய வசதி அறிமுகம் செய்துள்ளது..!

இந்தியாவில் இப்போது ஸ்மார்ட்போன் இல்லாத ஆளே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைவரிடமும் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவரும் மொபைல் பரிவர்த்தனைகளுக்கான கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற மொபைல் ஆப்களை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றன. இதனால் வங்கிகளுக்கு அலைவதும், வரிசையில் காத்துக் கிடைக்கும் நிலை அதிகமாகவே குறைந்துள்ளது. இந்த மொபைல் ஆப்களில் வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுவதால் இவற்றை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். Google Pay செயலியைப் பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

கூகுள் பே-யில் வரும் புதிய அம்சம் இனி அதிவேகமாக பணம் அனுப்பலாம்

இந்த அம்சத்தின் மூலம் ஒவ்வொருமுறையும் நாம் கூகுள் பேயில் கேமராவை ஓபன் செய்து ஸ்கேன் செய்ய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் யூபிஐ சேவைகளில் ஒன்றாக ஜிபே இருக்கிறது. தற்போது இந்த ஜிபேயில் விரைவாக பணம் அனுப்பும் புதிய அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பின் லேப்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து கூகுள் நிறுவனம் ‘Tap to Pay’ என்ற அம்சத்தை ஜிபேயில் அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி கடையில் பொருட்கள் வாங்குபவர்கள் ஸ்கேன் செய்வதற்கு பதில் அவர்களது போனை டேப் செய்தால் போதும். கூகுள் பேவிற்கு தானாகவே சென்று யூபிஐ பின் கேட்கப்படும். அதன்பின் யூபிஐ பின்-ஐ டைப் செய்தால் பணம் விரைவாக சென்று விடும்.

இந்த அம்சத்தின் மூலம் ஒவ்வொருமுறையும் நாம் Google Pay-யில் கேமராவை ஓபன் செய்து ஸ்கேன் செய்ய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Pay மூலம் BANK ACCOUNT பணம் அனுப்புவது எப்படி? 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தொழில்நுட்ப செய்திகள்
Advertisement