கோவில் பூசாரிக்கு தேய்காய் உடைக்கும் வேலை இல்லையா? தேங்காய் உடைப்பதற்கு புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு !!!

Advertisement

கோவில் பூசாரிக்கு தேய்காய் உடைக்கும் வேலை இல்லையா?

இப்போது கண்டுபிடிக்கப்படும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் பல வகைகளில் அனைவருக்கும் பயனுள்ளதாகத்தான் இருக்கின்றது.

பொதுவாக மக்கள் அனைவரும் கோவில் செல்வதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்களது குறைகளையும், மன அழுத்தத்தையும் தெய்வத்திடம் சொல்லும்போது அவர்களுக்கு கிடைக்கும் மன அமைதிக்காகத்தான் கோவில்களுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது கண்டிப்பாக  அர்ச்சனை செய்வதற்காக, அர்ச்சனை தட்டு வாங்குவார்கள்.

அந்த அர்ச்சனை தட்டில் வாழைப்பழம், தேங்காய், பூ, சூடம் போன்ற சில பொருட்கள் இடம் பெற்றிருக்கும்.

அதிலும் நம் மக்களுக்கு அர்ச்சனை செய்யும்போது ஒரு பதட்டம் இருக்கும், அது என்னவென்றால் தேங்காய் சரியாக உடையவேண்டும், பின்பு கெட்டுப்போன தேங்காயாக இருக்க கூடாது என்பதுதான்.

குறிப்பாக தேங்காய் கோணலாக உடையாமல் இருக்க வேண்டும் என்ற பதட்டம் நம் மக்களுக்கு அதிமாக இருக்கும்.

அதுவும் குறிப்பாக தேங்காயை அர்ச்சகர் உடைக்கும்போது, கோணலாக உடைந்துவிட்டால் மக்கள் மிகவும் வருத்தம் அடைந்து ஏதோ தெய்வக்குற்றம் நிகழ்ந்தது போல் நினைப்பார்கள்.

எனவே மக்களின் பயத்தை போக்குவதற்காக தற்போது புதிய டெக்னாலிஜியில் தேங்காயை சாமியே உடைப்பதற்கு புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வருபவர்கள் தேங்காயை சாமியின் வாயில் வைத்தால் அந்த தேங்காய் மிகவும் அழகாக உடைக்கப்பட்டு ஒரு மூடி தேங்காய் மட்டும் சாமியின் கையில் வந்து இருக்கும், அதை மக்கள் எடுத்துக்கொள்கின்றனர்.

இந்த தொழில்நுட்பத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது, அதுமட்டுமின்றி இதனால் பக்தர்கள் விரைவில் தரிசனம் பெற்று செல்லும் சூழ்நிலை உருவாகிறது என்று தான் கூறவேண்டும்.

இந்த தொழில்நுட்பம் கூடிய விரைவில் பல்வேறு கோவில்களுக்கு எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இதைபோல் பல்வேறு பொது இடங்களிலும் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்பாட்டுக்கு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

 

Advertisement