சாம்சங் ஸ்மார்ட்போனில் ஐந்து கேமரா உள்ளதா?

சாம்சங் நிறுவனத்தை பற்றி புதிதாக சொல்ல தேவை இல்லை, ஆண்டுக்கு ஆண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

ஆனால் இந்த முறை சாம்சங் நிறுவனம் புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் பின்புறம் மூன்று கேமராக்கள் மற்றும் டூயல் செல்பீ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புகள் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் சார்பில் தெரிவித்துள்ளது.

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள அமைப்புகள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களாக வெளிவரும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் தென்கொரிய செய்தி நிறுவனம் இவற்றை குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது என்பன குறிப்பிடதக்கது.sumsung

சிறப்பு அம்சங்கள்:

இந்த கேமராவின் சிறப்பு அம்சங்கள் என்னவென்றால் வேரியபிள் அப்ரேச்சா சென்சார், சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா மற்றும் டெலிஃபோட்டோ என்ற அம்சங்கள் இந்த கேமரா கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றும் இந்த கேமரா பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும்.

120 கோணம்:

இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள வைடு ஆங்கிள் கேமரா ஆனது 120 கோணம் கொண்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் இது ஐந்து கேமராக்கள் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாகவும் இருக்கும் என்று சாம்சங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது அறிமுகம்:

இந்த ஸ்மார்ட்போன் ஆனது சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா 2019-ல் தான் அறிமுகம் செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மொபைல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்புகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேலக்ஸி எஸ்10:

அந்த நிறுவனம் விரைவில் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யும் என்று தெரிவித்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு முன்பே அறிமுகம் படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

புரட்சிகர அம்சங்களை காண முடிகிறது!

சாம்சங் கேலக்ஸ் எஸ்10 ஸ்மார்ட்போனில் சில புரட்சிகர அம்சங்களை காண முடிகிறது. கேலக்ஸ் எஸ்10 ஸ்மார்ட்போன் ஆனது முற்றிலும் பெஸல்லெஸ் ஆக வெளிவரலாம்.

அதனை தான் எஸ்10 கான்செப்ட்டும் வெளியிப்படுத்தியுள்ளது. அதனுடன் ஸ்மார்ட்போன் பக்கங்களிலும் வளைந்தவிளிம்புகளும் காணப்படும்.

புகைப்படம்:

இந்த புகைப்படம் ஆனது டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் மூலம் ”ஒரு வடிவமைப்பை மிஞ்சியதாக இருக்கலாம்” என்கிற தலைப்புடன் வெளியாகியுள்ளது. மிக கூர்மையாக, இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் இன்னும் வெளியாகாத பட்சத்தில் எஸ்10 பற்றிய அம்சங்களை ஆராய்வது வேடிக்கையாக இருக்கும்.

இருந்தாலும் கூட, சாம்சங் நிறுவனம் எஸ்10 மீதான போதுமான வேலை முடிந்து விட்டது என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளதால், லீக்ஸ் அம்சங்கள் மிக விரைவில் நமது கைகளை எட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

கைரேகை சென்சார்:

வெளியான கான்செப்ட் ஆனது கேலக்ஸி எஸ்10 தானா அல்லது இல்லையா.? என்கிற நியாய தர்மங்களை ஓரங்கட்டி விட்டு பார்த்தால், இந்த ஸ்மார்ட்போன் கான்செப்ட் மிகவும் அழகானதாக உள்ளது. கூறப்படும் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஆனது சிஇஎஸ் 2019 நிகழ்விற்கு முன்பே எந்த நேரத்திலும் அறிமுகமாகவும் வாய்ப்புகள் உள்ளது.

கண்டிப்பாக டிஸ்பிளேவின் கீழ் உட்பொதிக்கப்பட்ட கைரேகை சென்சாரை கொண்டிருக்கும் உடன் அண்டர் டிஸ்பிளே ஸ்பீக்கர் தொழில்நுட்பம் மற்றும் ஒரு மூன்று கேமரா அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE