செல்பி எடுக்க புதிய ஸ்டிக்கர் மற்றும் ஏமோஜீ..! கூகுளின் ஜிபோர்டு செயலி அறிமுகம்..!

Advertisement

கூகுள் நிறுவனம் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை ஸ்மார்ட்போனில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்த வண்ணமே உள்ளது.

தற்போது தொழில்நுட்ப ரீதியாக கூகுள் நிறுவனத்தின் படைப்புக்கு வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், கூகுள் நிறுவனம் தற்போது செல்பிக்கு பயன்படும் வகையில் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி நீங்கள் இதில் செல்பி எடுத்தாலும், அதில் சென்று ஸ்டிக்கர்ஸ் உள்ளிட்ட பல்வேறு வேலைப்பாடுகளை எளிதாக செய்ய கூகுளின் ஜிபோர்டு ஆப் உதவி செய்யும்.

இன்றைய இளைஞர்களுக்கு சொல்லவே வேண்டாம் செல்பி எடுப்பதில் மிகவும் அசத்தி வருகின்றனர். அவர்களது எண்ணங்களும் தனிப்பட்ட விருப்பங்களும் தான் செல்பிக்கு முக்கியமானதாக இருக்கின்றது.

செல்பி எனப்படும் சுய புகைப்படம் சமுதாயத்தில் இளைஞர்கள் மத்தியில் தனி மதிப்பை கொடுக்கின்றது. இளைஞர்கள் வாழ்கையில் ஸ்சுவாரசியம் நிறைந்த செல்பியை எடுத்து வருகின்றனர்.

செல்பி எடுத்தாலும் அதில் தனி கவனம் செலுத்தி எடிட்டிங் வேலைபாடுகளையும் இளைஞர்கள் கஷ்டப்பட்டு செய்து அசத்துகின்றனர்.

அதில் இன்சர்ட் ஸ்டிக்கர்களையும், ஏமோஜீகளையும் அதில் சேர்த்து தங்களது சுய புகைப்படத்தை மேலும் அழ கூட்டி பேஸ்புக், வாட்ஸ்ஆப் குழுக்களிலும் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கூகுள் நிறுவனம் ஜிபோர்டு என்னும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஜிபோர்டு கிபோர்டு ஆப்பை ஐஒஎஸ், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கு பயன்படும் வகையில் தற்போது உருவாக்கியுள்ளது.

நாம் செல்பி எடுத்த பிறகு புகைப்படத்தை எடிட்டிங் செய்யும் விதமாக கூகுளின் ஜிபோர்டு கிபோர்டு உருவாகியுள்ளது. இவற்றில் ஏமோஜீகளையும், ஸ்டிக்கர்களையும் புதிப்பித்து கொள்ளலாம்.

மேலும் இந்த ஆப்பில் தோல் நிறம், கூந்தல் கலர், ஐ கலர் போன்றவற்றை உருமாற்றி கொள்ளலாம்.

தற்போது உருவாகியுள்ள இந்த ஜிபோர்டை பயன்படுத்தி புதிய தொழில்நுட்பத்தில் செல்பிகளை உருவாக்க முடியும்.

இதில் தனாகவே அவதார் உட்பட பல்வேறு புகைப்படங்களை போல மாற்றிக் கொள்ளும் வசதியும் இருக்கின்றது.

மேலும் இதில் 100 ஸ்டிக்கர்களை இதில் தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி நமது எண்ணகளுக்கு ஏற்றார் போல் மாற்றிக்கொள்ளலாம்.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement