ஜியோவிற்கு சவால் BSNL-லின் ரூ.75 திட்டம்.!

BSNL

ஜியோவிற்கு சவாலாக அனைத்து தொலைபேசி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் அரசு நிறுவனமான BSNL-லும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது ரூ.75/-க்கு புதிய சலுகையை வழங்கி உள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் BSNL நிறுவனம் போட்டி போடுகிறது.BSNL

ஆச்சிரியம் மூட்டும் BSNL-லின் ரூ.75-க்கான சலுகை:

ஆச்சிரியம் மூட்டும் அறிவிப்பில் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் அளவில்லா வாய்ஸ் கால்களையும், 10 ஜிபி டேட்டா, 500 எஸ்எம்எஸ் உள்ளிட்டவைகளை பெறலாம்.

கூடுதலாக 500 எஸ்எம்எஸூம் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 15 நாட்கள். இருந்தாலும் நீட்டித்து கொள்ளலாம்.

நீட்டிக்கும் முறை:

ரூ.75-க்கான சலுகையின் நாட்கள் முடிந்தாலும் ரூ.98 அல்லது அதற்கு மேல் கட்டணம் செலுத்தி 18 நாட்களுக்கு நீடித்து கொள்ளலாம்.

ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 98 வழங்கி வரும் சலுகைக்கு போட்டியாக பிஎஸ்என்எல்லின் திட்டம் அமைந்துள்ளது.

ஜியோவின் திட்டம்:

ஜியோ நிறுவனம் ரூ.98க்கு 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ், அளவில்லா வாய்ஸ் கால்களை வழங்கி வருகிறது.

இந்த திட்டம் 28 நாட்களில் காலாவதியாகும். தற்போது ஜியோ நிறுவனத்திற்கு சவால் விடும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு அமைந்துள்ளது.

பயன்பெறும் வட்டாரங்கள்:

தற்போது அறிவித்துள்ள ரூ.75க்கான திட்டம் ஆந்திரா, தெலுங்கானா, வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.

மேலும் அறிவிக்கப்பட்டுள்ள அளவில்லா இலவச அழைப்புகள் மும்பை, டெல்லி வட்டாரங்களுக்கு பொருந்தாது.

சலுகை வழங்கும் திட்டங்கள்:

ரூ.75க்கான சலுகைகள் பயன்பெறும் மற்ற வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்டவில்லை. ரூ.98, ரூ.99, ரூ.118, ரூ.137, ரூ.187, ரூ.198, ரூ.333, ரூ.349, ரூ.444, ரூ.447, 551 விலையில் சலுகைகள் வழங்கப்படுகிறது.

இந்த வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE