ஜியோவுக்கும் போட்டியா??? ஏர்டெல் அதிரடி பிளான்!!!

ஜியோவுக்கும் ஏர்டெல் போட்டியா

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிக டேட்டா தரும் வகையில், அதன் ரூ.499 போஸ்ட்பெய்டு திட்டத்தை மேலும் புதுப்பித்துவுள்ளது. இந்த திட்டம் ‘மை ப்ளான் இன்பைனிடி ப்ளான்’ வகையின் கீழ் வருகிறது.

மேலும் இவற்றில் ரூ.399, ரூ.649, ரூ.799 மற்றும் ரூ.1199 மதிப்புள்ள திட்டங்களும் உள்ளன. அந்நிறுவனம் சமீபத்தில் 90 ஜிபி வழங்கும் வகையில் தனது ரூ.649 திட்டத்தை மேலும் புதுப்பித்துவுள்ளது.

ரூ.499 திட்டத்தின் கீழ், போஸ்ட்பெய்டு வாடிக்கையளர்களுக்கு 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு இந்த திட்டத்தின் கீழ் 40ஜிபி, 3ஜி மற்றும் 4ஜி டேட்டா வழங்கப்பட்டது.

ஏர்டெல் நிறுவனம்:

ஏர்டெல் நிறுவனம் மேம்படுத்தப்பட்டுள்ள, இந்த ரூ,499 திட்டத்தில் டேட்டா மட்டுமின்றி 100 எஸ்.எம்.எஸ்,மற்றும் வரைமுறை அற்ற உள்ளுர் / எஸ்.டி.டி மற்றும் நேஸ்னல் ரோமிங் அழைப்புகள் போன்றவையும் வழங்கப்படுகின்றன.

500ஜிபி வரை ரோல் ஓவர் வசதியுடன் 3ஜி மற்றும் 4ஜி டேட்டா வழங்கப்படும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் நிகழ் காலத்தில் பயன்படுத்தப்படாத டேட்டா, அடுத்த மாதத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

வேறு சில சலுகைகளும் வழங்கப்படும்:

இந்த திட்டத்தில் வேறு சில சலுகைகளும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் சந்தா வழங்கப்படும்.

மேலும் விங்க் மியூஸிக், லைவ் டிவி மற்றும் மூவிஸ் தொடர்பிக்கான சந்தா மற்றும் மொபைல் சேதம் அடைந்தால் அதற்கான பாதுகாப்பு போன்றவற்றையும் ரூ.499 திட்டத்தில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் வாடிக்கையாளர்களுக்கு அதிக டேட்டா வழங்கும் வகையில் தனது ரூ.799 மற்றும் ரூ.1199 மை ப்ளான் இன்பைனிடி-யை புதுப்பித்துள்ளது.

ரூ.799 போஸ்ட்பெய்டு திட்டம்:

ஜியோவுக்கும் ஏர்டெல் போட்டியா

ஏர்டெல் நிறுவனம் புதுப்பித்துள்ள இந்த ரூ799 திட்டத்தில், ஏற்கனவே 60ஜிபி 3ஜி மற்றும் 4ஜி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது 100ஜிபி ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது ரோல் ஓவர் வசதியுடன் வருவதால் நடப்பு மாதத்தின் பயன்படுத்தப்படாத டேட்டா, அடுத்த மாதத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் இந்த சலுகைகள் மட்டுமின்றி வரம்பற்ற உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் நேசனல் ரோமிங் அழைப்புகள் போன்றவையும் வழங்கப்படுகின்றன.

இந்த சலுகைகள் தவிர்த்து கூடுதல் சலுகையாக ஏர்டெல் பயனர்கள் ஓராண்டிற்கான அமேசான் ப்ரைம், விங்க் மியூஸிக், ஏர்டெல் டிவி, மொபைல் சேதம் அடைந்தால், அதற்கான பாதுகாப்பு போன்றவையும் ரூ799 திட்டத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ1199  போஸ்ட்பெய்டு திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் புதுப்பித்துள்ள இந்த ரூ1199 திட்டத்தில், ஏற்கனவே 90ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது 120ஜிபி ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது ரோல் ஓவர் வசதியுடன் வருவதால் நடப்பு மாதத்தின் பயன்படுத்தப்படாத டேட்டா, அடுத்த மாதத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் இந்த சலுகைகள் மட்டுமின்றி வரம்பற்ற உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் நேசனல் ரோமிங் அழைப்புகள் போன்றவையும் வழங்கப்படுகின்றன.

அமேசான் ப்ரைம்:

இந்த சலுகைகள் தவிர்த்து கூடுதல் சலுகையாக ஏர்டெல் பயனர்கள் ஓராண்டிற்கான அமேசான் ப்ரைம், விங்க் மியூஸிக், ஏர்டெல் டிவி, மொபைல் சேதம் அடைந்தால், அதற்கான பாதுகாப்பு போன்றவையும் ரூ1199 திட்டத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE