தகவல் தொழில்நுட்பம் எதற்கெல்லாம் பயன்படுகிறது:

Advertisement

கணினிகளுடன் தகவல்களை ஒழுகமைப்புச் செய்தல், கணினியியல், இலத்திரனியல், தொலைதோடர்பு போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை ஒரு செயல்முறைக்கு உட்படுத்தி ஒழுங்மைப்புச் செய்தல் பரிமாற்றம் செய்தல் போன்ற செயல்பாடுகளை உள்ளடங்கியது தகவல்தொழில்நுட்பம்.

பொருளாதாரத்துக்கு ஆற்றும் பங்களிப்புகள்:

கல்வித்துறை, போக்குவரத்துச் சேவை, பொறியியல் துறை, மருத்துவத் துறை, இராணுவ பாதுகாப்பு துறை, பொழுது போக்கு மற்றும் தொலைத்தொடர்பு சேவை போன்றவற்றில் தகவல் தொழில்நுட்பம் பங்களிக்கிறது.

வங்கித் துறை:

வங்கித்துறையில் தகவல் தொழில்நுட்ப்பமானது தன்னியக்க வங்கி கணக்கு கணித்தல் முறை, தன்னியக்க அட்டை (ATM card) பயன்பாடு என்பவற்றை குறிப்பிடலாம்.

கல்வித் துறை:

கணினி வழிகாட்டலில் கற்றல்.
கணினி வழிகாட்டலில் பாடசாலை நிர்வாகம்.

உதாரணம்:

கணினி வழிகாட்டலில் கற்றல் என்பது வினாக்கள்.
தொகுத்தல், செயல்பாடு மற்றும் பயிற்சி அளித்தல் விளையாட்டு.
பிரச்சனைக்கு தீர்வு காணல் என்பவற்றுக்கு உதவுகிறது.

போக்குவரத்து துறை:

இரயில் மற்றும் விமானபோக்குவரத்து ஆசனங்களை பதிவு செய்தல்.
வாகன போக்குவரத்து கட்டுப்படுத்தல்.
ஊழியர்களின் கடமை நேர அட்டவணை தயாரித்தல்.
வான்வெளி பயணங்களில் கணினியானது பல்வேறு வழிகளில் உதவுகிறது.

பொறியியல்:

பொறியியலாளர்கள் தகவல் தொழில்நுட்பத்தை பயன்ப்படுத்தி இயந்திரங்கள், கருவிகள், கட்டிடங்கள் போன்றவற்றிற்கான வரைப்படங்களை தயாரிக்கின்றனர்.

மருந்துவத்துறை:

வைத்தியத்துறையில் புதிய கருவிகளின் வருகை.
நோயாளர்களின் பதிவுகளை மேற்கொள்ளவும் உதவுகிறது.

பாதுகாப்பு:

தகவல் தொழில்நுட்பமானது குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவுகிறது.
உதாரணம்: மோட்டார் வேகத்தை நெறிப்படுத்த உதவுகிறது.

பொமுது போக்கு:

தகவல் தொழில்நுட்பமானது இன்று எல்லோராலும் ஒரு பொழுது போக்குச்சாதனமாக பயன்படுத்தபட்டு வருகிறது.

உதாரணம்:

கணினி மூலமான விளையாட்டுகள்.
கணினி மூலமான படம் பார்த்தல்.
கணினி மூலமான பாடல்க்கேட்டல். என பலவகையான பொழுது போக்குச் சாதனங்கள் தகவல் தொழில்நுட்பத்தில் பங்கு பெற்று வருகிறது.

தொடர் பாடல்:

தகவல் தொழில்நுட்பமானது தொடர்பாடல் துறையிலே புதிய தொடர்பாடல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் குறைந்த செலவுடனும் விரைவாகவும் தகவல்களை பரிமாறக்கூடியதாக உள்ளது.

Advertisement