மெசேஜ் பிரியர்களுக்கு செக்: வாட்ஸ்அப் கொண்டு வரும் கட்டுப்பாடு!

whatsapp

சில மாதங்களாக குழந்தை கடத்தும் கும்பல்கள் உலாவி வருவதாக வாட்ஸ்அப்பில் செய்திகள் வந்துகொண்டு இருக்கிறது.

இதன் காரணமாக பொதுமக்கள் சந்தேகப்படும் நபர்களை அடித்து துரத்துகின்றன.

அதுமட்டுமின்றி குழந்தையை வெளியே விளையாடவிடுவதற்கு கூட பெற்றோர்கள் தயங்குகின்றனர்.

இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு பிறக்கவேண்டும் என்று மத்திய அரசு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு எச்சரிக்கை இட்டது.

எனவே இதை தொடர்ந்து கடந்த மதம் வாட்ஸ்அப் நிறுவனம் 5 பேருக்கு மேல் ஒரு மெசேஜை பகிர முடியாத புதிய கட்டுப்பாட்டை கொண்டு வரப்போவதாக தெரிவித்திருந்தது.

இதில், ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் ஒரு மெசேஜை பகிர முயற்சிக்கும் போது செண்ட் பட்டன் வேலை செய்யாது.

மேலும், 6 ஆவது நபருக்கு மீண்டும் முதலிருந்து பகிர வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இந்த கட்டுப்பாடு இன்று முதல் இந்தியாவிலுள்ள சுமார் 200 மில்லயன் வாட்ஸ்அப் வாடிக்கையாளர்கள் மத்தியில் செயல்பாட்டிற்கு வருகிறது.

இதன் மூலம் பார்வேர்டு செய்வது மிக கணிசமான அளவு குறையும் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும், ஒரு மெசேஜை நூறு பேருக்கு நீங்கள் அனுப்பினால் நல்ல காரியம் நடக்கும் என்பது போன்ற எரிச்சலை தரும் மெசேஜ்யும் குறையும்.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE