வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ரிலையன்ஸ் ஜியோ வின் அடுத்த அதிரடி திட்டம் என்ன தெரியுமா?

Updated On: July 3, 2018 10:44 AM
Follow Us:
Reliance, jio
---Advertisement---
Advertisement
  • தொலைதொடர்பு சேவையை வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்தக்கட்டமாக பிராட்பேண்டில் எஃப்டிடிஹெச் தொழில்நுட்பம் மூலம் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது.
  • ஒரு மாதத்திற்கு ஒரு ஜி.பி டேட்டா தான் என்ற நிலைமையை மாற்றி ஒரு நாளைக்கு ஒரு ஜி.பி டேட்டா என்ற புதிய அறிவிப்புடன் தொலைதொடர்பு சேவையில் களமிறங்கியது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நெட்வொர்க்.
  • இந்த அறிவிப்பை கண்டு மற்ற நெட்வொர்க்குகள் மிகவும் திண்டாடினர்.
  • ஜியோவின் இந்த அறிவிப்பால் பல நிறுவனங்கள் சரிவை சந்தித்தனர்.
  • அது மட்டுமின்றி போன் கால்கள் இலவசம் என்ற ஜியோவின் அதிரடி அறிவிப்பால் பொதுமக்களின் கவனங்கள் அனைத்தும் ஜியோவின் பக்கம் திரும்பியது.
  • இதன் மூலம் அதிகபட்சமான வாடிக்கையாளர்கள் குறைந்த நாட்களிலே கவர்ந்தது ஜியோ நிறுவனம்.
  • இப்படிப்பட்ட சூழலில்  தற்போது பிராட்பேண்டிலும் கால் பதிக்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
  • அதன்படி ஃபைபர் டூ த ஹோம் (Fiber to the home) எஃப்டிடிஹெச் என்ற பெயரில் பிராட்பேண்ட் சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்க உள்ளது.
  • அதாவது, ஜியோவில் பயன்படுத்திய அதே யுக்திகளை பிராட்பேண்டிலும் கையாளப்போகிறது ரிலையன்ஸ்.
  • அதாவது ஜியோவை போலவே தொடக்கத்தில் இலவச டேட்டாக்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ்.

அது என்ன எஃப்டிடிஹெச் தொழில்நுட்பம் என்று இவற்றில் நாம் காண்போம்.

jio

  • ஒவ்வொரு வீட்டுக்கும் தனிதனியாக ஃபைபர் கேபிள் மூலம் இணையதள சேவையை வழங்கும் திட்டத்தின் பெயர் தான் எஃப்டிடிஹெச்.
  • தற்போது காப்பர் கேபிள் மூலம் பிராட்பேண்ட் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
  • ஆனால் எஃப்டிடிஹெச்சில் ஃபைபர் கேபிள் பயன்படுத்தப்பட உள்ளது.
  • ஃபைபர்நெட் நமக்கு புதிதல்ல என்றாலும், அதிலும் வீட்டிற்கு கொடுக்கப்படும் இணைப்புகள் காப்பர் கேபிள்களாக மட்டுமே இருந்தன. ஆனால் ஜியோ வில் ஃபைபர் கேபிள் மட்டுமே கொடுக்கப்படும்.
  • இது முழுக்க முழுக்க ஃபைபர் கேபிள் மூலமாக இங்குவதால் இணைதளத்தின் வேகம் சதாரன வேகத்தை விட 100 மடங்கு அதிகமாக இருக்கும்.
  • இதனால் நாம் அன்றாட பயன்படுத்தும் கணினியில் தேடுதல், கேம்ஸ், விடியோக்கள் மற்றும் டவுண்லோடு செய்தல் போன்ற அனைத்தும் மிகவும் அசத்தல் வேகத்தில் இருக்கும்.
  • இந்த தொழில்நுட்பத்தை இதற்கு முன்னால் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சென்னை மற்றும் கொல்கத்தாவில் மட்டுமே வழங்கி வருகிறது.
  • தற்போது ஜியோ நிறுவனம் பல்வேறு நகரங்களில் ஒரே நேரத்தில் எஃப்டிடிஹெச் சேவையை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
  • இதனால் தற்போது பிராட்பேண்ட் சேவையை வழங்கி வரும் ஏர்டெல் உள்ளிட்ட  நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்படும் எனத் தெரிகிறது.
  • இதன்மூலம் இந்தியா முழுவதும் பிராட்ண்பேட் சேவையை கைப்பற்றும் மிகப்பெரிய திட்டத்தில் இறங்கியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now