ரூ.50-க்குள் சிறந்த சலுகைகளை வழங்கும் ஏர்டெல், வோடோ, ஜியோ.!

Advertisement

தற்போது அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய சலுகைகளும் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்து கொண்டே வருகிறது.

அதுவும் குறிப்பாக ஏர்டெல், வோடோபோன் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் வகையில் ரூ.50-க்கு ஏர்டெல், வோடோபோன் மற்றும் ஜியோ போன்ற நிறுவங்கள் குறிப்பிட்ட சலுகைகளை அறிவித்துள்ளது.

குறிப்பாக ஜியோ அறிவித்த ரூ.49-க்கு வழங்கப்பட்ட திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

jioரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஜனவரி 26 2018 அன்று ரூ.49-க்கு திட்டத்தை அறிமுகம் செய்தது.

அந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, பின்பு இலவச உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் போன்றவை வழங்கப்படுகிறது.

மேலும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 50 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது என ஜியோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vodafoneவோடோபோன்:

வோடாபோன் நிறுவனம் பொறுத்தவரை ரூ.47 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது,

இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 500 எம்பி வரை டேட்டா வழங்கப்படுகிறது.

குறிப்பாக இலவச உள்ளூர்,எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 50 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது என வோடாபோன் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த திட்டத்தை 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

airtelஏர்டெல்:

ஏர்டெல் ரூ.49 திட்டத்தில் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது,

பின்பு இந்த திட்டத்தை ஒரு நாள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்பு  ஏர்டெல் ரூ.9 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 100 எம்பி டேட்டா இலவச கால் அழைப்புகள் போன்றவை ஒரு நாள் பயன்படும் வகையில் உள்ளது.

ஏர்டெல்  திட்டம்:

ஏர்டெல் ரூ18 திட்டத்தில் 100 எம்பி டேட்டா இலவச கால் அழைப்புகளை 2 நாட்கள் பயன்படுத்த முடியும்,

அதேபோல்  ரூ.23 திட்டத்தில் 200 எம்பி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் இலவச கால் அழைப்புகளை 2 நாட்கள் பயன்படுத்த முடியும்.

மேலும் ஏர்டெல் ரூ.29 திட்டத்தில் 150எம்பி டேட்டவை 28நாட்கள் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement