வாட்ஸ்அப் மூலம் ரயில் எங்கே இருக்கிறது என்பதை தெரிஞ்சிக்கலாமா?

whats-app

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வரும் ஒன்றுதான் வாட்ஸ்அப் செயலி. இவற்றில் பல்வேறு சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் இந்த செயலில் புதிய வசதிகள் இடம்பெறுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆமாங்க வாட்ஸ்அப் செயலி மூலம் நீங்கள் பயணம் போகும் ரயில் எங்கே இருக்கிறது, நாம் இருக்கும் நிலையத்திற்கு இன்னும் எவ்வளவு நேரத்தில் வரும் என்பது போன்ற தகவல்களை பெற முடியும்.

ரயில் எண்ணை குறுஞ்செய்தியாக அனுப்பினால் அந்த ரயில் குறித்த முழு விவரம் நமக்கு வந்தடையும்.

ரயில் தற்போது எங்கே வந்துக்கொண்டிருக்கிறது. அடுத்து எந்த ஸ்டேசனுக்கு வரும். எத்தனை நிமிடங்களில் அந்த ரயில் சேர வேண்டிய இடத்திற்கு சென்றடையும் என்பது குறித்த தகவல்கள் கிடைக்கும்.

இந்த எண்ணை 7349389104 உங்கள் மொபைலில் பதிவு செய்து கொள்ளுங்கள். இந்த எண்ணிற்கு நீங்கள் பயணம் போகும் ரயில் எண்ணை அனுப்பினால். 10 வினாடிகளில் ரயில் ஓட்டம் குறித்த தகவல் கிடைக்கும்.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE