1 நொடிக்கு 1ஜிபி என்ற புயல் வேகத்தில் ஜியோவின்(jio) பிராட்பேண்ட்.!

Advertisement

பலரும் எதிர்பார்த்திருந்த ஜியோ ஜிகா ஃபைபர் பிரான்ட்பேன்ட் திட்டத்தை சில தினத்திற்கு முன் நடந்த ரிலையன்ஸ்(jio) வருடாந்திர கூட்டத்தில் அறிமுகம் செய்தது.

அதன் அடுத்த இலக்கு பிராட்பேண்ட் சேவைதான் என்ற வதந்திகள் இப்பொழுது உண்மையாகி உள்ளது.

ஜியோ ஜிகா ஃபைபர் என்று பெயரிடப்பட்ட பிராட்பேண்ட் சேவை கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.

இந்த ஜியோ ஜிகா ஃபைபர் சேவைக்கான பதிவு, ஆகஸ்ட் 15 முதல் முன்பதிவு தொடங்குகிறது.

இந்தியா முழுவதிலும் 1,100 நகரங்களில் ஜியோ ஜிகா ஃபைபர் சேவையை பயனர்களுக்குக் கிடைக்கும் வகையில் ஜியோ நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

இந்தச் சேவையை பின்வரும் நாட்களில் விரிவுபடுத்தப்படுமென்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

JIOஒரு வினாடிக்கு 1 ஜிபி வேகம்:

ஜியோ ஜிகா பைபர் சேவை ஒரு வினாடிக்கு 1ஜிபி வேகம், என்ற வேகத்தில் இந்த புதிய சேவையைப் பயன்படுத்த முடியும் என ஜியோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஆகஸ்ட் 15 முதல் மைஜியோ ஆப் (Myjio app) அல்லது ஜியோ (jio.com) இணையதளத்தில் லாகின் செய்து பதிவு செய்துகொள்ளலாம்.

இதற்கான முன்பதிவை இலவசமாகச் செய்துகொள்ளலாம் என்று அம்பாணி கூறியிருக்கிறார்.

பிராட்பேண்ட் சேவை:

மேலும், இதைப் பிரபலப்படுத்த ஜியோ சந்தையில் அறிமுகமாகும் போது, 3 மாதம் கூடுதல் வேலிடிட்டியுடன் ஒரு நொடிக்கு 1ஜிபி வேகத்தில் பிராட்பேண்ட் சேவை வழங்கப்படுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பு அளித்த சில சலுகைகளை இதற்கும் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிகா டிவி:

ஜிகா டிவி மற்றும் ஸ்மார்ட் ஹோம் சேவை என்ற இரண்டு சேவைகளை ஜிகா ஃபைபர் சேவையில் அறிமுகம் செய்துள்ளது. மேலும்,

இதைப் பிரபலப்படுத்த ஜியோ சந்தையில் அறிமுகமாகும்போது, ப்பிரீ புக் செய்பவர்களுக்கு ஜிகா பைபர் ரௌட்டர் மற்றும் ஜிகா டிவிக்கான செட்டாப் பாக்ஸ் வழங்கப்படுகிறது.

jio-giga-fiber-router4K தொழில்நுட்பத்தில் 100 எச்டி சேனல்:

ஜிகா டிவி சேவையில் உங்களுக்கு ஜிகா டிவிக்கான செட்டாப் பாக்ஸ் உடன் 400 எச்டி சேனல் மற்றும் அன்லிமிடெட் மூவிஸ் மற்றும் இதர ஜியோ ஆப் சேவைகள் அனைத்தும் கிடைக்கப்பெறுவீர்கள் என்ற அறிவிப்பை ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி வெளியிட்டனர்.

இதில் 4K தொழில்நுட்பத்தில், திரையரங்குகளில் படம் பார்ப்பது போல அனுபவத்தைப் பெறலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

ஜிகா ஸ்மார்ட் ஹோம்:

ஜிகா ஸ்மார்ட் ஹோம் சேவையில் உங்களுக்குத் தேவையான சூப்பர் செக்யூரிட்டி சேவைகளை வழங்குகிறது.

இதில் உங்களுக்கு ஆடியோ டோங்ல், வீடியோ டோங்கல், ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஸ்மார்ட் பிளக், அவுட்டோர் சிசிடிவி, ஸ்மார்ட் டிவி, இண்டோர் கேமரா, புகை சென்சார், காஸ் லீக் சென்சார் போன்று நிறைய வேவைகள் வழங்கப்படுவதாக அம்பானி தெரிவித்தார்.

JioGigarouterஆகஸ்ட் 15 இல் முன்பதிவு:

இந்தச் சேவை மற்றும் ரிலையன்ஸ் தயாரிப்புகள் ஜிகாபிட் கணெக்ஷன் உங்களுக்கு வேண்டும் என்றால், உங்களுடைய மைஜியோ ஆப் அல்லது ஜியோ (jio.com) இணையதளத்தில் லாகின் செய்து முன்பதிவு செய்து இந்தச் சேவையை பெற்றுக்கொள்ளலாம். ஆகஸ்ட் 15 இல் முன்பதிவு தொடங்குகிறது.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement