4G vs 5G Difference in Tamil
தற்போது மொபைல் வாங்க நினைக்கும் அனைவருக்கும் இருக்கின்ற ஒரே குழப்பம் 4ஜி மொபைல் வாங்குவதா? 5ஜி மொபைல் வாங்குவதா? என்றுதான். 2ஜி தொழில்நுட்பத்தில் தொடங்கி 3ஜி, 4ஜி என இப்போது 5ஜி தொழில்நுட்பம் வரை வந்துவிட்டோம். தொழில்நுட்பமானது அதிவேகமாக வளர்ந்துகொண்டே செல்கிறது. இந்த டிஜிட்டல் உலகத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லவே 5ஜி தொழிநுட்பமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாம் இப்பதிவில் பார்க்க இருப்பது 4ஜி தொழில்நுட்பத்திற்கு 5ஜி தொழில்நுட்பத்திற்கும் இடையேயான வேறுபாடுகளை பற்றித்தான்! இப்பதிவின் மூலம் 4ஜி, 5ஜி வித்தியாசங்களை நீங்கள் தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம்!
5ஜி என்றால் என்ன?
5ஜி தொழில்நுட்பமானது மில்லிமீட்டர் அலை ஸ்பெக்ட்ரமில்(30-300 கிகா ஹெர்ட்ஸ்) என்ற அதிவேக அதிர்வெண் பயன்படுத்தி இயங்கக்கூடிய தொழில்நுட்பமாகும். இதனால் 5ஜி தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி பெரிய அளவில் தரவு(Data) மற்றும் பதிவிறக்கம்(Download) செய்ய முடியும். மேலும் இதன் வேகமானது 1-20 ஜிபி வரை செல்லக்கூடியது. இதன் காரணமாக பல தேவைகளுக்கு இத்தொழில்நுட்பத்தினை எளிதாக பயன்படுத்திகொள்ளலாம்.
4ஜி Vs 5ஜி வித்தியாசங்கள்:
2000 ஆம் ஆண்டு 3ஜி தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. அதனை தொடர்ந்து 3ஜி தொழில்நுட்பத்தினை விட அதிகவேகமாக 4ஜி தொழில்நுட்பம் வந்தது. தற்போது அதற்க்கு அடுத்தபடியாக மின்னல் வேக தொழில்நுட்பமாக 5ஜி தொழிநுட்பம் வரப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் => 4ஜி மொபைல் விலை பற்றி தெரிந்துகொள்வோமா..?
அதிர்வெண்( Frequency)
- 4ஜி தொழில்நுட்பம் 2-8 கிகா ஹெர்ட்ஸ் அதிர்வெண் பயன்படுத்தி இயங்கக்கூடியது.
- 5ஜி தொழில்நுட்பம் 30-300 கிகா ஹெர்ட்ஸ் அதிக அதிர்வெண் பயன்படுத்தி இயங்கக்கூடியது.
- இந்த அதிக அதிர்வெண் பயன்படுத்தி இயங்குவதால் 5ஜி தொழில்நுட்பம் 4ஜி தொழில்நுட்பத்தினை விட 10 மடங்கு அதிக அலைவரிசையை கொண்டுள்ளது. இதனால் 5ஜி தொழில்நுட்பத்தின் வேகமும் அதிகரிக்கிறது.
- 4G இடம் அதிகம் நிறைந்த பகுதிகளில் 4ஜி சேவையை பயன்படுத்தும் போது அதன் வேகம் குறைவாக இருக்கும்.
- ஆனால் இதற்கு மாறாக 5ஜி தொழில்நுட்பமானது ஒரே சமயத்தில் ஒரு சதுர கிலோமீட்டரில் 1 மில்லியன் சாதனங்கள் வரை சேவை அளிக்கும் திறன் வாய்ந்தது. எனவே 5ஜி தொழில்நுட்பத்தினை கூட்டம் நிறைந்த பகுதிகளிலும் தங்கு தடையின்றி பயன்படுத்தலாம்.
5ஜி தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள்:
- 5ஜி தொழில்நுட்பம் தொலைதொடர்புக்கு மட்டும் பயன்படுவதில்லை. இதனை பயன்படுத்தி “இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்” (Internet of things) என்ற மற்ற சாதனங்களையும் இணையதளம் மூலமாக எளிதாக கட்டுப்படுத்தவும் முடியும்.
- மேலும் வர்ச்சுவல், ரியாலிட்டி, ஆர்டிபிசியல் இண்டலிஜென்ஸ் என்ற செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கும் உதவுகிறது.
- மேலும் 5ஜி தொலில்நுட்பத்தின் நெட்வொர்க் ஸ்ப்லைசிங்(Network Splicing) மூலம் ஒரே நெட்வொர்க்கை பிரித்து பல நெட்வொர்க்காக பயன்படுத்த முடியும். இதனால் டெடிகேட்டட் லையன் வசதியை எளிதாக பெற முடியும். மேலும் இம்முறையில் பாதுகாப்புடன் தரவுகளை அனுப்பலாம்.
இதையும் படியுங்கள் =>மிக சிறந்த பெஸ்ட் 5ஜி மொபைல்கள் இவைதான்!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |