Photography Mistakes in Tamil
ஆண்ட்ராய்டு போன் இருந்தால் போட்டோ எடுக்கமால் இருப்பீர்களா.! தினமும் ஒரு போட்டோ எடுப்பீர்கள். ஆனால், எடுக்கும் போட்டோ எல்லாம் போனிலும் ஒரே மாதிரியாக இருக்காது. உங்க போனில் போட்டோ எடுத்துவிட்டு நல்லா இல்லன்னா போன் சரியில்லை, கேமரா சரியில்லை என்று சொல்வதை தவிர்த்து விட்டு இந்த பதிவில் கூறியுள்ள டிப்ஸை மட்டும் Follow பண்ணி போட்டோ எடுங்க சூப்பரா இருக்கும். வாங்க நண்பர்களே அதை மட்டும் தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Photography Mistakes in Tamil:
நீங்கள் எப்போ போட்டோ எடுத்தாலும் Lens -ஐ துடைத்து விட்டு எடுக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் எடுக்கும் போட்டோ Clear ஆக இருக்கும். இல்லையென்றால் சரியாக இருக்காது.
போட்டோ ஜூம் செய்து எடுப்பது:
ஒரு தூரத்தில் இருப்பதை போட்டோ எடுப்பதற்காக ஜூம் பண்ணி எடுப்பீர்கள். இந்த போட்டோ Clear -ஆ இருக்காது. அதனால் உங்களுக்கு போட்டோ Clear ஆக வேண்டுமென்றால் Zoom செய்து எடுக்காதீர்கள்.
ஜம்ப் ஆவதை போட்டோ எடுப்பது எப்படி.?
சில நேரங்களில் ஜம்ப் ஆவது, வண்டி ஓட்டுவது போன்ற செயலை செய்யும் போது போட்டியோ எடுத்தால் Clear ஆக இருக்காது. சரியான நேரத்திலேயும் எடுக்க முடியாது.
எடுத்துக்காட்டாக, பலூனில் தண்ணீர் வைத்து வெடிப்பதை எடுக்க வேண்டுமென்றால் போட்டோ எடுப்பதற்கு அழுத்தும் பட்டனை லாங் பிரஸ் செய்து கொண்டே இருங்கள்.
இப்படி செய்யும் போது ஆட்டோமேட்டிகா போட்டோ எடுத்து கொண்டே இருக்கும். பிறகு போட்டோ எடுத்து பாருங்கள் அதில் நிறைய போட்டோ இருக்கும். அதில் தேவையான போட்டோவை மட்டும் வைத்து கொண்டு மற்றவற்றை Delete செய்து கொள்ளவும்.
இதையும் படியுங்கள் ⇒ வாட்ஸப்பில் அனுப்பிய போட்டோவை Gallery-யில் Save ஆகாமல் தடுக்கலாம்
போட்டோ எடுப்பது எப்படி.?
நீங்கள் எந்த போட்டோவை எடுக்க வேண்டுமோ அதை நடுப்பகுதியில் தெரிகின்ற அளவிற்கு வைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு மரத்தை எடுக்க போகிறீர்கள் என்றால் அந்த மரம் கேமராவில் நடுவில் தெரிவது போல் வைத்து எடுக்க வேண்டும். இப்படி வைத்து போட்டோ எடுத்து பாருங்கள் போட்டோ Clear -ஆக இருக்கும்.
Image Quality Ratio:
போட்டோ மற்றும் வீடியோ எடுத்ததில் Quality இருக்க வேண்டுமென்றால் Aspect Ratio சரியாக இருக்க வேண்டும். கேமராவில் கிளிக் செய்ததும் மேலே மூன்று கோடுகள் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
கிளிக் செய்ததும் 1:1, 3:4, 9:16 என்று இருக்கும். அதில் 3:4 என்பதை கிளிக் செய்ய வேண்டும். இந்த Ratio-வில் வைப்பது போட்டோ மற்றும் வீடியோ எடுப்பதற்கு சிறந்ததாக இருக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் வாட்சப்பில் டெலிட் செய்த போட்டோ மற்றும் வீடியோவை திரும்ப எடுக்கலாம்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |