ஆதார் அட்டை பிறந்த தேதி மாற்றம் செய்வது எப்படி?

Aadhar Card Date of Birth Change in Tamil

ஆதார் அட்டை பிறந்த தேதி மாற்றம் – How to Change Date of Birth in Aadhar in Tamil?

அனைத்து தேவைகளுக்கு இப்போது ஆதார் அட்டை அவசியமாக தேவைப்படுகிறது. வங்கி பரிவர்த்தனைகள் முதல் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வரை எதுவாக இருந்தாலும், சரி நீங்கள் ஆதார் அட்டையை அவசியம் வைத்திருக்க வேண்டும். ஆகவே உங்கள் விவரங்களை ஆதார் அட்டையில் நீங்கள் கொடுத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அதனை உடனடியாக மாற்ற வேண்டும். அந்த வகையில் பெரும்பாலோனோர் ஆதார் அட்டையில் பிறந்த தேதியை தவறாக கொடுத்திருப்பார்கள். அதாவது அவர்களது பள்ளி சான்றிதழ்களில் ஒரு தேதி இருக்கும், ஆதார் கார்டில் வேறொரு தேதியாக இருக்கும். இவ்வாறு இருந்தால் நீங்கள் வங்கியிலோ அல்லது வேற ஏதாவது ஒரு விஷயத்திற்கு ஆதார் கார்டினை ஆவணமாக கொடுக்கும் போது. அதனை பார்க்கும் அலுவலர்கள் பிறந்த தேதி ஒவ்வொரு ஆவணத்தில் மாறிமாறி இருக்கிறது என்று உங்கள் ஆவணத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே பிறந்த தேதியை மாற்ற நீங்கள் இ சேவை மையத்திற்கு அலைய வேண்டியதாக இருக்கும்.

ஆதார் கார்டில் பிறந்த தேதி, பெயர் மற்றும் தொலைபேசி எண் போன்ற விவரங்களை எளிதாக நீங்கள் மாற்றலாம். அவற்றை உங்கள் வீட்டில் இருந்தபடியே அப்டேட் செய்ய முடியும். இருப்பினும், புகைப்படம், மொபைல் நம்பர், பிறந்த தேதி  போன்றவற்றை அப்டேட் செய்ய அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்குத்தான் செல்ல வேண்டும்.

ஆதார் கார்டு பிறந்த தேதி திருத்தம் – Aadhar Card Date of Birth Change in Tamil:-

ஆன்லைன் வழியாக ஆதார் அட்டையில் உங்கள் பிறந்த நாளை மாற்றுவது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.,

ஸ்டேப்: 1

 

முதலில் Self Service Update Portal (SSUP) தளமான https://myaadhaar.uidai.gov.in/ssup என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.

ஸ்டேப்: 2

 

அவற்றில் ‘Login’ என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.

ஸ்டேப்: 3

Login என்பதை கிளிக் செய்தவுடன் மேல் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் ஒரு பேஜ் திறக்கப்படும். அவற்றில் Enter Aadhaar என்பதில் உங்கள் 12 இலக்க ஆதார் அட்டை எண்ணை உள்ளிட்ட வேண்டும்.

ஸ்டேப்: 4

அதன்பிறகு Enter Above Captcha என்பதில் உங்கள் திரையில் காட்டப்பட்டுள்ள கேப்சா குறியீட்டை உள்ளிட்ட வேண்டும்.

ஸ்டேப்: 5

பின்னர் OTP என்பதை கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப்: 6

இதனை தொடர்ந்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP எண்ணை பதிவு செய்து உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 7

 

பிறகு மேல் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் ஒரு page திறக்கப்படும் அவகற்றில் இந்த வலைதளத்தில் என்னென்ன Services உள்ளது என்பதை பட்டியலிடப்பட்டிருக்கும். அவகற்றில் நீங்கள் Update Aadhaar Online என்ற option-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப்: 8

Update Aadhaar Online என்பதை கிளிக் செய்தவுடன் மேல் படத்தில் காட்டியுள்ளது போல் ஒரு பேஜ் திறக்கப்படும் அவற்றில் உள்ள விஷயங்களை நீங்கள் முழுமையாக படிக்கலாம் இல்லையென்றால் அவற்றில் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் procced to update aadhaar என்பதை கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப்: 9

பிறகு மேல் படத்தில் காட்டியுள்ளது போல் ஒரு பக்கம் திறக்கப்படும் அவற்றில் Language, Name, Date of Birth, Gender, Address போன்ற option இருக்கும். அவற்றில் நீங்கள் எதை மாற்றம் செய்ய உள்ளீர்களோ அந்த option-ஐ தேர்வு செய்து உங்கள் விவரங்களை மாற்றம் செய்து கொள்ளலாம். இருப்பினும் புகைப்படம், பிறந்த தேதி, மொழி, போன் நம்பர் போன்றவற்றை மாற்றம் செய்ய வேண்டும் என்றால். நீங்கள் கட்டாயம் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு தான் செல்ல வேண்டியதாக இருக்கும்.

தொடர்புடைய பதிவுகள்
ஆன்லைனில் ஆதார் கார்டு லாக் செய்வது எப்படி?
குழந்தைக்கு ஆதார் கார்டு அப்ளை செய்வது எப்படி?
ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?
ஆதார் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி?

 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil