Accessibility Settings in Tips And Tricks in Tamil
ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் போனில் உள்ள செட்டிங்ஸ் அனைத்தும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. போனில் அதிகமாக பயன்படுத்துகின்ற வாட்சப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயல்களில் உள்ள செட்டிங்ஸ் பற்றி தெரிந்திருக்கும். இதை தவிர போனில் Accessibility Settings பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Accessibility Settings Tips in Tamil:
Whatsapp Accessibility Settings in Tamil:
முதலில் பார்க்க போகின்ற செட்டிங்ஸ் எதற்காக என்று தெரிந்து கொள்ளுங்கள். வாட்ஸப்பில் அனுப்பிய சில மெசேஜ் பெரியதாக இருக்கும். அதை படிக்க உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் அந்த மெசஜை சொல்லும் படி வைப்பதற்கு இந்த செட்டிங்கின்ஸ் பயன்படுத்தலாம்.
ஸ்டேப்:1
Settings என்பதை கிளிக் செய்து Additional settigns என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் Accessibility என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப்:2
Accessbilty என்பதை கிளிக் செய்தவுடன் Gendral,visin, hearing, physical என்று இருக்கும் அதில் vision என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப்:3
Vision கிளிக் செய்ததும் Talkback என்பது OFF -யில் இருக்கும். அதை ON செய்ய வேண்டும். பின் Allow கேட்கும் அதை கொடுத்து விடவும்.
ஸ்டேப்:4
Allow கொடுத்த பிறகு கீழ் பகுதியில் குறியீடு அல்லது Button தோன்றும். இதன் மூலம் வாட்ஸப்பில் ஏதேனும் செய்தி வந்திருக்கும் போது இந்த குறியை கிளிக் செய்து விட்டு செய்தியின் மேல் டச் செய்தால் படித்து காட்டும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Zoom Accessibility Settings in Tamil:
நீங்கள் போனில் ஏதாவது படிக்கும் பொழுது சிறியதாக இருந்தால் படிக்க முடியாது அதை சூம் செய்து படிப்பீர்கள். எழுத்தை சூம் செய்யாமல் எழுத்தை பெரியதாக மாற்றுவதற்கு Accessibility Settings உதவுகிறது. அது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
ஸ்டேப்:1
Settings என்பதை கிளிக் செய்து additional settigns என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் Accessibility என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப்:2
Accessibility என்பதை கிளிக் செய்தவுடன் gendral,visin, hearing, physical என்று இருக்கும். அதில் அதில் vision என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப்:3
Vision கிளிக் செய்ததும் Magnification என்பதை கிளிக் செய்ய வேண்டும். Magnification கிளிக் செய்ததும் Magnify with triple tap என்பதை ON செய்ய வேண்டும்.
Magnify with triple tap மேல் படத்தில் உள்ளது போல் இருக்கும் அதில் accessbility என்பதை ஆன் செய்து விட்டால் எந்த article படித்தாலும் பெரியதாக காட்டும். அது மட்டுமில்லாமல், வாட்சப்பில் வந்திருக்கும் article லை Zoom செய்ய முடியாது. இந்த ஆப்ஷனை ஆனில் வைத்தால் மட்டுமே Zoom செய்ய முடியும்.
இதையும் படியுங்கள் ⇒ பெற்றோர்களே குழந்தைகளை போன் யூஸ் பண்ணாத என்று சொல்லாமல் இப்படி Timing செட் பண்ணுங்க..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |