Always On Data Good Or Bad In A Smartphone in Tamil
அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய கால கட்டத்தில் மொபைல் போன் நம் அனைவரின் வாழ்விலும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. இன்றைய நிலையில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. அதுபோல ஸ்மார்ட் போனால் நல்ல விஷயங்களும் உண்டு. அதேபோல, அதனால் ஆபத்துக்களும் உண்டு. நாம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் விதத்தை வைத்து தான் நன்மைகளையும் தீமைகளையும் அறிய முடியும். அந்த வகையில் இன்று மொபைல் போன் டேட்டாவை On -ல் வைத்திருப்பது நல்லதா..? கெட்டதா..? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்கள் ஸ்மார்ட் போனின் Pattern -யை மறந்து விட்டீர்களா..? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்..! |
Smartphone Data On Advantages in Tamil:
சிலர் மொபைல் போன் டேட்டாவை பயன்படுத்தும் போது மட்டும் On -னில் வைத்திருப்பார்கள். அதேபோல சிலர் 24 மணி நேரமும் மொபைல் போன் டேட்டாவை On -னில் வைத்திருப்பார்கள்.
அதுபோல 24 மணி நேரமும் மொபைல் டேட்டாவை On -னில் வைத்திருக்கலாமா என்ற கேள்விகள் அனைவரிடமும் இருக்கும். அந்த கேள்விக்கான பதிலை இங்கு பார்க்கலாம்.
ஒரு பகுதியில் Network முழுமையாக கிடைக்கிறது என்றால், அந்த பகுதியில் வசிப்பவர்கள் 24 மணி நேரமும் டேட்டாவை On செய்து வைத்திருக்கலாம். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை.
அதேபோல, Network முழுமையாக கிடைக்கும் பகுதிகளில் மொபைல் டேட்டாவை On -னில் வைத்திருக்கலாம். அந்த நேரத்தில் நாம் போனை பயன்படுத்தினாலும் போன் பேட்டரி சூடாக மாறாது. காரணம் Network உள்ள பகுதியில் மொபைல் நெட்ஒர்க்கை தேடி வேலை செய்வதில்லை.
உங்கள் பகுதியில் நெட்ஒர்க் முழுமையாக கிடைத்தாலும், நீங்கள் போனை பயன்படுத்தும் போது மட்டும் டேட்டாவை On -னில் வைக்க வேண்டும்.
ஏனென்றால், உங்கள் போனில் டேட்டாவை On செய்து பயன்படுத்தாமல் இருந்தாலும், போனில் இருக்கும் மற்ற செயலிகள் இயங்கிக்கொண்டிருக்கும். அதனால், நீங்கள் போனை பயன்படுத்தும் போது மட்டும் டேட்டாவை On -னில் வைத்திருங்கள்.
உங்கள் போன் Setting -ல் மறைந்துள்ள ரகசியம் உங்களுக்கு தெரியுமா..? |
Smartphone Data On Disadvantages in Tamil:
அதேபோல ஓரு பகுதியில் Network முழுமையாக கிடைக்கவில்லை என்றால், அங்கு வசிப்பவர்கள் மொபைல் டேட்டாவை On -னில் வைத்திருக்க கூடாது. காரணம், Network இல்லாத பகுதிகளில் மொபைல் டேட்டா 24 மணி நேரமும் On -னில் இருப்பதால் அது போனில் எதிர் விளைவை ஏற்படுத்துகிறது. Network இல்லாத பகுதியில் டேட்டா On -னில் இருக்கும் போது மொபைல் தொடர்ந்து நெட்ஒர்க்கை தேடி வேலை செய்கிறது. அந்த நேரத்தில் மொபைல் போன் தொடர்ச்சியாக வேலை செய்வதன் காரணமாக, போன் பேட்டரி சாதாரண நிலையை விட அதிக கதிர்வீச்சை வெளியிடுகிறது.
இதனால் போன் விரைவாக பழுதடைந்து விடுகிறது. அதுமட்டுமில்லாமல், அதிக கதிர்வீச்சு காரணமாக நமக்கு சில ஆரோக்கிய பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
Network இல்லாத பகுதியில் டேட்டா On -னில் இருக்கும் போது நாம் போனை பயன்படுத்தாமல் இருந்தாலும் போன் சூடாக இருக்கும். அந்த நேரத்தில் போன் அதிகளவு கதிர்வீச்சை வெளியிடுவது தான் இதற்கு காரணம்.
அதனால் Network இல்லாத பகுதியில் இருக்கிறீர்கள் என்றால், அந்த இடத்தில் மொபைல் பயன்படுத்தும் போது மட்டும் டேட்டாவை On -னில் வைத்திருங்கள். மற்ற நேரங்களில் டேட்டாவை Off செய்வது நல்லது.
இதனால் உங்கள் போன் வெப்பமடையாமல் இருக்கும். அதுபோல கதிர்வீச்சு அபாயமும் குறையும்.
குறிப்பு: நீங்கள் 24 மணி நேரமும் மொபைல் டேட்டாவை On செய்து வைப்பதற்கு பதிலாக, மொபைல் போனை பயன்படுத்தும் போது மட்டும் டேட்டாவை On -னில் வைத்திருப்பது மிகவும் நல்லது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |