Artificial Intelligence Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே சாமானிய மக்களை வியக்க வைக்கும் அளவிற்க்கு தொழிநுட்பம் நன்கு வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கிறது. உலகமே இன்று வாய் ஓயாமல் மிகவும் எதிர்பார்த்து பேசிக்கொண்டிருக்கும் ஒரே விஷயமாக இருப்பது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பற்றி தான். சரி இந்த பதிவில் செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?, செயற்கை நுண்ணறிவு பயன்கள், செயற்கை நுண்ணறிவு தீமைகள், செயற்கை நுண்ணறிவு வகைகள், செயற்கை நுண்ணறிவு குறைகள் போன்ற விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
நாம் எப்போது இறப்போம் என்பதை கணிக்கும் AI Death Calculator!!
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?
இந்த செயற்கை நுண்ணறிவு எனப்படுவது கணினி அறிவியலின் வளர்ச்சியை காட்டும் உச்ச நிலையாகும், அதாவது நுட்பமான இயந்திரங்களை உருவாக்கி மனிதர்களைப்போல செயல்பட வைக்கும் ஒரு நுணுக்கமான தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு.
இப்போது நாம் அத்தகைய அறிவின் ஆரம்ப நிலைகளை பயன்படுத்தத் துவங்கி விட்டோம், உதாரணமாக பாதைகளின் போக்குவரத்து நெரிசல்களை துல்லியமாக கூறும் கூகிள் நேவிகேட்டர். நம் கட்டளைகளை செவிசாய்த்து கேட்டு விடை அளிக்கும் “அலெக்சா”, “கூகிள் வாய்ஸ்” இதுபோன்ற செயற்கை நுண்ணறிவு கொண்ட அம்சங்களை பயன்படுத்தி வருகின்றோம்.
செயற்கை நுண்ணறிவின் நிலைகள்:
செயற்கை நுண்ணறிவு என்பது முக்கியமான மூன்று நிலைகளைக் கொண்டது அவை.
- இயந்திர கற்றல் (Machine Learning)
- இயந்திர அனுபவம் (Machine Experience)
- முடிவெடுக்கும் திறன் (Decision based on AI)
செயற்கை நுண்ணறிவு பயன்கள்:
இந்த செயற்கை அறிவாற்றலின் பயன்பாடுகளை அனைத்துத் துறைகளிலுமே பயன்படுத்த முடியும். உதாரணமாக, விவசாயம், தொழில்நுட்பம், கார், ஆட்டோமொபைல், மருத்துவம், பொறியியல், ஆசிரியர்பணி போன்ற அனைத்துத் துறைகளிலும் செயற்கை அறிவாற்றல் முறைகளைப் பயன்படுத்தமுடியும்.
Artificial Intelligence Advantages and Disadvantages in Tamil
செயற்கை நுண்ணறிவின் நன்மைகள்:
இந்த செயற்கை நுண்ணறிவு தவறுகளை குறைக்க உதவுகிறது மற்றும் அதிக அளவு துல்லியத்துடன் செயற்படுகிறது. இதனாலேயே விண்வெளி ஆய்வு போன்ற பல்வேறு ஆய்வுகளில் இது AI பயன்படுத்தப்படுகிறது.
கடினமான ஆய்வுகளுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் விஞ்ஞானம் சுரங்க மற்றும் பிற எரிபொருள் ஆய்வு செயல்முறைகளில் பயன்படுத்தப்படலாம்.
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே இயல்பாகவே ஒரு வேலையை மீண்டும் மீண்டும் செய்வதாக இருந்தால் ஒரு வகை சலிப்பானதாக இருக்கும். இருப்பினும் AI பொறுத்தவரை மீண்டும் மீண்டும் செய்யப்படும் வேலைகளை இயந்திர நுண்ணறிவின் உதவியுடன் மேற்கொள்ளலாம்.
மருத்துவர்கள் பெரும்பாலும் செயற்கை அறுவை சிகிச்சை சிமுலேட்டர்களுடன் (Simulators) பயிற்சி பெறுகிறார்கள். இது மூளையின் செயல்பாடுகளை உருவகப்படுத்தி நரம்பியல் கோளாறுகளைக் கண்டறிவதில் உதவுகிறது. மேலும் மனநல நோயாளிகளுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு சுறுசுறுப்பாக இருக்க உதவுவதில் ரோபாட்டிக்ஸ் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவின் பிரபலமான பயன்பாடு கதிரியக்க அறுவை சிகிச்சை ஆகும். கதிரியக்க அறுவை சிகிச்சை உடம்பில் உருவாகும் கட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது. இது உண்மையில் சுற்றியுள்ள திசுக்களை சேதப்படுத்தாமல் சிகிச்சையைச் செய்கிறது.
இயந்திரங்களுக்கு அடிக்கடி இடைவேளைகள் மற்றும் புத்துணர்ச்சி நேரங்கள் அதாவது தெளிவாக கூறவேண்டும் என்றால் இயந்திரங்களுக்கு ஒய்வு நேரம் என்று தேவைப்படுவதில்லை.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |