அசுஸ் கம்பெனி இரண்டு லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது..!

asus laptops models

அசுஸ் கம்பெனி இரண்டு லேப்டாப் புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

Asus Laptops New Models

அசுஸ் நிறுவனம் தற்போது புதிய இரண்டு விவோபுக் எஸ்14 மற்றும் விவோபுக் எஸ்15 என்ற இரண்டு லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது., இந்த லேப்டாப் மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதி மற்றும் நிற மாறுபாடுகளில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்த இரண்டு லேப்டாப் மாடல்களில் விற்பனை மற்றும் விலைப் பற்றி தகவல்களை தெரிவிக்கவில்லை அசுஸ் நிறுவனம். விரைவில் இந்திய சந்தைக்கு விவோபுக் எஸ்14 மற்றும் விவோபுக் எஸ்15 மாடல்கள் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

வயர்லெஸ் பிராண்ட்பேண்ட் மார்க்கெட்… ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த திட்டம்

அசுஸ் விவோபுக் எஸ்14 (vivobook s14) :

Asus Laptops Models – அசுஸ் விவோபுக் எஸ்14 (vivobook s14)சாதனம் பொதுவாக 14-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் 1920 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது.

பின்பு 8-வது ஜென் இன்டெல் கோர் ஐ7-8565யு பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

அசுஸ் விவோபுக் எஸ்14 (vivobook s14) சேமிப்பு:

Asus Laptops Models – அசுஸ் விவோபுக் எஸ்14 (vivobook s14) சாதனம் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை உள்ளடக்க சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது.

பின்பு இன்டெல் யுஎச்டி 620 என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ்250 கிராபிக்ஸ் வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அசுஸ் விவோபுக் எஸ்15 (vivobook s15):

Asus Laptops Models – அசுஸ் விவோபுக் எஸ்15 (vivobook s15) சாதனம் பொதுவாக 15.6-இன்ச் எல்இடி முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1920 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது.

மேலும் குவாட்-கோர் 8-வது ஜென் இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.

அசுஸ் விவோபுக் எஸ்15 (vivobook s15) சேமிப்பு:

Asus Laptops Models – அசுஸ் விவோபுக் எஸ்15 (vivobook s15) சாதனத்தில் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது.

பின்பு சிறந்த கிராபிக்ஸ் சிப்செட் வசதியுடன் இந்த லேப்டாப் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதன்படி ஒருங்கிணைக்கப்பட்ட இன்டெல் யுஎச்டி 620 மற்றும் 2ஜிபி கிராபிக்ஸ், என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ்250 ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும்.

ரூ.13,990-விலையில் களமிறங்கிய ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவி.! (LED Tv Reviews)
இதுபோன்று தொழில்நுட்ப செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை லிங்கை கிளிக் செய்யவும் —> தொழிநுட்ப செய்திகள்