சுழல் கேமராவுடன் இந்தியாவுக்கு வரும் Asus 6Z ஸ்மார்ட்போன்!

Advertisement

சுழல் கேமராவுடன் இந்தியாவுக்கு வரும் Asus zenfone 6 ஸ்மார்ட்போன்!

தொழிநுட்ப செய்திகள்..!

ரொட்டேடிங் கேமரா (Flip Camera) வசதி இந்த ஸ்மார்ட்போனில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரைமரி கேமராவாகவும், செல்பி கேமராவாகவும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும்.

அசுஸ் நிறுவனத்தின் சென்போன் 6 அல்லது அசுஸ் 6Z என்ற ஸ்மார்ட்போன் இந்தியாவில் நேற்று மதியம் 12.30 மணியளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விபரங்களை இங்கு காணலாம்.

தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்டு, உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னனி இடத்தில் இருப்பது அசுஸ் நிறுவனம். கடந்த மாதம் இறுதியில் அசுஸ் நிறுவனத்தின் 6 ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதே ஸ்மார்ட்போன் இந்தியாவில் நேற்று அசுஸ் 6Z என்ற பெயரில் நேற்று மதியம் 12.30 மணியளவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக விழாவானது நேரலையாக அசுஸ் நிறுவனத்தின் சமூகவலைதள பக்கங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஸ்மார்ட்போனில் இனி இந்த குழப்பம் இருக்காது கூகுள் அறிவிப்பு..!

தொழிநுட்ப செய்திகள் கேமரா:

பல ஸ்மார்ட்போன்களில் பாப் அப் கேமரா வந்துள்ள நிலையில், அசுஸ் Asus zenfone 6 ஸ்மார்ட்போனும் அதே போல ஒரு கேமராவை ஸ்மார்ட்போனில் உருவாக்கியுள்ளது. இதற்கு Rotating Camera என்று பெயரிடப்பட்டுள்ளது.

போனின் மேற்புறத்தில் சிறிய அளவிலான ஒரு மோட்டார் மூலம் கேமரா எட்டிப்பார்க்கும். முன்புறம், பின்புறம் இரண்டு பக்கத்திலும் இது திரும்பி போட்டோ எடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Asus zenfone 6 விலை:

ஐரோப்பாவில் Asus zenfone 6 அறிமுகம் செய்த போது, 6ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட போனின் விலை, இந்திய மதிப்பின்படி சுமார் 31,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது.

இதே மாடலில் 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை 34,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது.

அதிகபட்சமாக 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி கொண்ட அசுஸ் 6 விலை 39,999 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தியாவிலும் 6Z அறிமுகம் செய்யப்படும் போனின் விலை இதே போன்று தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்ப செய்திகள் Asus zenfone 6 இல் உள்ள அடிப்படை சிறப்பம்சங்கள்:

  1. சிம்: டூயல் சிம்
  2. டிஸ்ப்ளே: 6.4 இன்ச்
  3. பிக்சல்: 1080×2340 பிக்சல்
  4. விகிதம்: 19.5:9
  5. பிராசசர்: ஸ்நாப்டிராகன் 855 SoC
  6. ரேம்: 8ஜிபி
  7. மெமரி: 256ஜிபி
  8. கேமரா: ரொட்டேடிங் கேமரா
  9. பிரைமரி கேமரா: 48 மெகா பிக்சல்
  10. செகன்டரி கேமரா: 13 மெகா பிக்சல்
  11. கனெக்ட்டிவிட்டி: வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்,
  12. சார்ஜர்: டைப் சி, அதிவேக சார்ஜர்
  13. பேட்டரி: 5,000 mAh சக்தி

இந்த தொழில்நுட்ப செய்திகள் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்…

LG நிறுவனம் உலகின் முதன்முதலாக 8K டிவி அறிமுகம் செய்துள்ளது..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..!
Advertisement