சிறந்த 5 ஆண்ட்ராய்டு வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்..! Top 5 Video Editing App for Android..!

Advertisement

சிறந்த 5 ஆண்ட்ராய்டு வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்..! Best Video Editing App in Tamil..!

Best Video Editing App in Tamil:- நம்மில் பலருக்கு வீடியோ எடிட்டிங் செய்வதில் அதிக ஆர்வமும், அதிக ஆசைகளும் இருக்கும். அதாவது பிறந்த நாள் கொண்டாட்டம், சுற்றுலா மற்றும் வீட்டில் நடைபெறும் இல்ல விசேஷங்கள் என அனைத்து தருணங்களையும் வீடியோக்கள் மூலம் சேமித்து வைத்து கொள்வோம். இந்த வீடியோக்களை நமது ஆண்ட்ராய்டு போன் மூலமாக மிக எளிதாக எடிட் செய்து கொள்ளலாம் என்று நமக்கு தெரிந்திருக்கும்.

இருந்தாலும் வீடியோ எடிட் செய்ய எந்த ஆப் சிறந்தது என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உங்கள் ஸ்மார்ட்போன் வீடியோக்களையும், ஸ்மார்ட்டாக எடிட் செய்ய பல Video Editing App இருக்கின்றது. அவற்றில் சிறந்த 5 Video Editing App பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Best video editing app for android..!

ActionDirector Video Editor:-

ActionDirector Video Editor

முதலாவதாக நாம் தெரிந்துகொள்ள போகின்ற வீடியோ எடிட்டர் ActionDirector Video Editor. இந்த ActionDirector Video Editor மிகவும் பிரபலமான வீடியோ எடிட்டிங் பயன்பாடுகளில் ஒன்றாகும். இதனை தங்களுடைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். ஆக்சன் டைரக்டர் வீடியோ எடிட்டரில் எடிட் செய்வது என்பது மிகவும் அடிப்படையான செயல் முறையாகவே இருக்கும்.

இந்த அம்சம் மூலம் தங்கள் எடிட் செய்யும் வீடியோவில் ஏதாவது சாங் அல்லது மியூசிக் வைத்து கொள்ளலாம், அதேபோல் தாங்கள் எடிட் செய்யும் வீடியோக்களை இந்த அம்சம் மூலம் கட் செய்து கொள்ளலாம், ஸ்லோமோஷனில் வைத்து கொள்ளலாம், வீடியோவில் ஏதாவது Text வைத்து கொள்ளலாம். மேலும் இந்த வீடியோ அம்சம் 4K வீடியோக்களை ஆதரிக்கும்.

Adobe Premiere Rush:-

Adobe Premiere Rush

இந்த Adobe Premiere Rush என்பது வீடியோ எடிட் செய்வதற்கு பயன்படுத்தும் ஒரு சிறந்த வீடியோ எடிட் ஆப் ஆகும். இதனை தங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்து வீடியோக்களை மிக எளிதாக எடிட் செய்து கொள்ளலாம்.

மேலும் உங்கள் ஸ்மார்ட்போன் வீடியோக்களையும், ஸ்மார்ட்டாக எடிட் செய்ய பலவகையான டூல்ஸ் இந்த Adobe Premiere Rush வீடியோ எடிட்டரில் இருக்கிறது. தங்களுக்கு இந்த ஆப் பயன்படும் என்றால் இப்பொழுதே தங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

FilmoraGo:-

FilmoraGo

ஃபிலிமோராகோ என்பது வொண்டர்ஷேரின் வீடியோ எடிட்டர் பயன்பாடு ஆகும். இது சிறந்த வீடியோ எடிட்டர் பயன்பாடுகளில் ஒன்றாகும். டிரிம் மற்றும் கட், ரெண்டர் மற்றும் பல வகையான எடிட்டிங்  விஷயங்களை நீங்களாகவே இவற்றில் செய்யலாம். மேலும் இவற்றில் பலவகையான சிறப்பு அம்சங்கள் அடங்கியுள்ளது.

அதாவது இந்த எடிட்டர் மூலம் தாங்கள் எடிட் செய்யும் வீடியோக்களை Play in reverse, do square videos (1:1) for Instagram, and 16:9 videos for YouTube எடிட் செய்து கொள்ளலாம்.

Funimate Video Editor:-

Funimate Video Editor

Funimate என்பது தற்பொழுது பிரபலமான உள்ள வீடியோ எடிட்டர் பயன்பாடுகளில் ஒன்றாகும். இந்த செயலியனை தங்கள் ஆண்ட்ரய்டு மொபைலில் டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். இவற்றில் பலவகையான video effects இருகின்றது.

அதாவது இதன் மூலம் Music, Emoji, Stickers, Text போன்றவற்றை Add செய்து கொள்ளலாம். மேலும் இந்த வீடியோ எடிட்டரில் பலவகையான அட்வான்டேஜ் அடங்கியுள்ளது.

InShot:-

InShot

இன்ஷாட் என்பது வீடியோக்களை மிகவும் சுலபமாக எடிட் செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஒரு சூப்பர் வீடியோ எடிட்டர் ஆகும். இதன் மூலம் பல வீடியோ மற்றும் ஆடியோ மிக சுலபமாக எடிட் செய்து கொள்ளலாம்.

இந்த InShot வீடியோ எடிட்டரிலும் பலவையான video effects இருகின்றது. தங்களுக்கு இந்த ஆப் பயன்படும் என்றால் இப்பொழுதே தங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.

newபுதுமையான கிச்சன் கேட்ஜெட்ஸ்..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement