விசிறியே இல்லாத மின்விசிறி! குறைந்த விலையில் Bladeless Fan!!
இறக்கைகளே இல்லாமல் இயங்கும் ஃபேன், எங்கு வாங்கலாம், விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விபரங்களை இங்கு காணலாம்.
ஓவல், வட்டம் என பல்வேறு டிசைன்களில் இறக்கை இல்லாத ஃபேன் கிடைக்கிறது. கம்பெனியின் தரம் மற்றும் டிசைனுக்கு ஏற்ப 1,500/- ரூபாயிலிருந்து 40 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கிடைக்கிறது. சிறிய ரக ஃபேன் 1,500/- ரூபாயாகும். இதனை நாம் எங்கு சென்றாலும், கையில் கூடவே எடுத்துச் செல்லாம்.
வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும். இதில் இறக்கைகள் இல்லை என்பதால், குழந்தைகள் கை இறக்கையில் பட்டு விடுமோ என்ற அச்சம் தேவையில்லை.
தொழில்நுட்ப செய்திகள் – லெனவோ நிறுவனம் உலகிலேயே முதன் முதலாக 5G Laptop அறிமுகம் செய்ய உள்ளது..! |
தொழில்நுட்ப செய்திகள் – Orient Bladeless Fan:
இதற்கு அடுத்ததாக ஓவல் வடிவத்தில் இருக்கும் ஓரியண்ட் பிராண்டு ஃபேன். இதன் விலை 6,200/- ரூபாயாகும். இதற்கு இரண்டு வருடம் வாரண்டி வழங்கப்படுகிறது. 40 வாட் மின்சக்தியில் இயங்கக்கூடியது.
பேனை இயக்குவதற்கு பிரத்யேகமாக ரிமோட்டும் கூடவே வழங்கப்படுகிறது. ஒரே ஒரு நிறம், வெள்ளை நிறத்தில் மட்டும் தான் தற்சமயம் கிடைக்கிறது. தொடர்ந்து 7.5 மணி நேரம் வரையில் இயங்கும்.
வீட்டில் மெயின் ஹால், கிச்சன், டைனிங், ஓய்வு அறை என எங்கு வேண்டுமானாலும் விசிறி இல்லா ஃபேனை பயன்படுத்தலாம். இறக்கைகள் இல்லை என்பதால், அதிகமான சத்தம் எதுவும் எழுப்பாது.
மேலும், ஃபேனில் நான்கு லைட் பொருத்தப்பட்டுள்ளது. நமது எண்ணங்களுக்கு ஏற்ப எந்த கலர் லைட் வேண்டுமோ அதை ஆன் செய்யலாம். இதே போல், டைமர் வசதியும் இதில் உள்ளது.
இரவு தூங்கும் போது இரண்டு மணி நேரம் மட்டும் பேன் ஒடினால் போதும் என்றால், டைமர் பயன்படுத்தி அதற்கு ஏற்ப செட் செய்து கொள்ளமுடியும்.
இந்த ஃபேனை பற்றிய முழுமையான விபரங்களை ஓரியண்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.orientelectric.com பக்கத்தைப் பார்க்கலாம்.
தொழில்நுட்ப செய்திகள் – Dyson Wifi / Bluetooth Fan:
வைஃபை மற்றும் ப்ளுடூத் மூலம் இயங்கும் விசிறி இல்லா ஃபேனும் ஆன்லைனில் கிடைக்கிறது. இதன் மூலம் மொபைல் உள்ள வைஃபை, ப்ளூடூத் பயன்படுத்தி பேனை இயக்கலாம்.
அமேசானில் இந்த மின்விசிறியின் விலை 39 ரூபாயாகும். இதற்கு இரண்டு வருடம் வாரண்டி வழங்கப்படுகிறது.
சிறப்பம்சம்:
வெறும் காற்று வீசுவது மட்டும் இல்லாமல், காற்றின் தரம், வெப்பநிலை எவ்வளவு உள்ளது, காற்று மாசு எந்த அளவுக்கு இருக்கிறது என்பது பற்றிய விபரங்களும் இந்த பேன் நமக்கு தெரிவிக்கும். 360 டிகிரி சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள ஹெப்பா பில்ட்டர், காற்றின் கார்பனை கட்டுப்படுத்துகிறது. எனவே, காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக டைசன் பேன் செயல்படுகிறது. தவிர எல்இடி ஸ்கீரின், ஆட்டோ மோட், நைட் மோட், டைமர் உள்ளிட்ட வசதிகளும் இதில் உள்ளது.
இந்த தொழில்நுட்ப செய்திகள் தங்களுக்கு பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் பகிர்த்திடுங்கள்.
தொழில்நுட்ப செய்திகள் – LG நிறுவனம் உலகின் முதன்முதலாக 8K டிவி அறிமுகம் செய்துள்ளது..! |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..! |