உங்கள் சிம்முக்கு எங்கு அதிகமாக சிக்னல் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா அப்போ இதை பாருங்கள்..!
பொதுவாக சில ஊரில் அதிகமாக செல்போன் சிக்னல் (mobile signal) சரியாக கிடைக்காது. இதன் காரணமாக நம்மால் சரியாக இன்டர்நெட் சேவைகளை பயன்படுத்த முடியாது.
அதேபோல் ஒரு அவசரத்திற்கு கூட நம்ம மற்றவர்களிடமிருத்தோ அல்லது நம்மிடமிருந்தோ ஒரு சரியான தகவலைகூட அனுப்பவோ அல்லது பெறவோ முடியாது. இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு ஒரு சூப்பரா ஐடியா சொல்றேன் வாங்க.
பொதுவாக நாம் பயன்படுத்தும் எந்த ஒரு சிம்மாக இருந்தாலும் சரி அதற்க்கான சிக்னல் நம் வீட்டில் இருந்த படியே எந்த இடத்தில் சிக்னல்(mobile signal) கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஒரு சூப்பர் ஆப் உள்ளது.
அவற்றை நம் செல்போனில் டவுன்லோட் செய்து கொண்டோம் என்றால் மிக எளிதாக எங்கு சிக்னல் கிடைக்கும் என்பதை நாம் தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.
சரி வாங்க அப்படி என்னதான் எந்த ஆப்பில் இருக்கிறது என்று இப்போது நாம் காண்போம்.
இனி இலவசமாக சார்ஜ் ஏற்ற முடியும்..!
நாம் செல்போன் சிக்னலை (mobile signal) தெரிந்து கொள்ள ஒரு புதிய ஆப்:
அப்படி என்ன தான் அந்த ஆப்? சொல்றேன் வாங்க network cell info lite app என்கின்ற இந்த ஆப்பை நாம் டவுன்லோட் செய்து கொண்டோம் என்றால், நாம் பயன்படுத்தும் எந்த ஒரு சிம்மின் சிக்னலையும் மிக எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
அதாவது நாம் பயன்படுத்தும் 2G, 3G, 4G என்று எந்த ஒரு சிம்மின் சிக்னலையும் மிக எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் இந்த APP-யில் ஒரு மேப் இருக்கும் அவற்றை பயன்படுத்தி நாம் இருக்கும் இடத்தில் இருந்து, நாம் பயன்படுத்திக்கொண்டு இருக்கும் சிம்மின் சிக்னல் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதையும் மிக சுலபமாக தெரிந்து கொள்ள முடியும்.
பொது மக்கள் கொண்டாட்டம் ஜியோவின் 5g technology விரைவில்…!
அதே போல் நாம் பயன்படுத்தி வரும் செல்போனில் (mobile signal) இரண்டு சிம் பயன்படுத்தினாலும், அந்த இரண்டு சிம்மின் சிக்னலையும் இந்த ஆப் மிக தெளிவாக காட்டிவிடும்.
மேலும் நாம் wifi கனைக்சன் செய்திருந்தாலும் அவற்றின் சிக்னலையும் இந்த ஆப் மிக தெளிவாக காட்டும்.
எனவே நம்ம வீட்டில் சிக்னல் எங்கு அதிகமாக கிடைக்கும் என்பதை இந்த ஆப் மிக தெளிவாக காட்டிவிடுகிறது.
இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக இருப்பதினால் உடனே டவுன்லோட் செய்து பயன்பெறவும்.
இந்த தகவல் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்திடுங்கள்.
சாம்சங்கின் புதிய மடங்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல், ரங்கோலி கோலங்கள் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.