BSNL offer கூடுதலான 2ஜிபி டேட்டா சலுகை !!!

Advertisement

புதிய BSNL offer ஒன்றை BSNL நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் BSNL நிறுவனம் குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா நன்மைகளை அறிவித்துள்ளது.

குறிப்பாக இந்த திட்டம் மக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றுதான் கூற வேண்டும்.

BSNL தற்போது அறிவித்துள்ள கூடுதல் டேட்டா சலுகை வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த BSNL நிறுவனம், ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக இந்த சலுகை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

BSNL நிறுவனம் தற்போது அறிவித்துள்ள சலுகைகள் என்னென்ன என்று இப்போது பார்ப்போம்.

BSNL நிறுவனத்தின் ரூ.186, ரூ.187, ரூ.333, ரூ.349, ரூ.429, ரூ.447, ரூ.485 மற்றும் ரூ.999 திட்டங்களில் தினசரி 2ஜிபி கூடுதல் டேட்டா நன்மையை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விரைவில் BSNL புதிய திட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்குமுன்பு BSNL நிறுவனம் ரக்ஷபந்தன் எனும் பண்டிகையை முன்னிட்டு ரூ.399 திட்டத்தில் அன்லிமிட்டெட் டேட்டா மற்றும் கால் அழைப்புகளை 74 நாட்களுக்கு வழங்கியது.

மேலும் பல்வேறு சலுகைகள் இந்த திட்டதில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது குறைந்த விலையில் கிடைக்கும் சில BSNL திட்டங்களைப் பார்ப்போம்.

BSNL நிறுவனம் வழங்கும் ரூ.29 ப்ரீபெய்ட் திட்டத்தில் 1 ஜிபி டேட்டா மற்றும் 100 SMS, இலவச கால் அழைப்புகள் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

குறிப்பாக இந்த திட்டத்தை 7 நாட்கள் பயன்படுத்த முடியும்.

BSNL நிறுவனம் வழங்கும் ரூ.19 ப்ரீபெய்ட் திட்டம் பொறுத்தவரை பயனர்கள், அதே நெட்வொர்க்கில் நிமிடத்திற்கு 15 பைசாவும், பிற நெட்வொர்க்குகளில் ஒரு நிமிடத்திற்கு 35 பைசாவும் திட்டத்தை செயல்படுத்துவதிலிருந்து, 54 நாட்களுக்கு குரல் அழைப்புகளை செய்ய அனுமதிக்கிறது.

குறிப்பாக இந்த திட்டம் தமிழ்நாட்டிற்கு மட்டுமே பயன்படும்.

BSNL ரூ.171 ப்ரீபெய்ட் திட்டம் பொறுத்தவரை ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தில் மொத்தமாக 60 ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்பு இலவச கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100 SMS போன்ற சலுகைகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 30 நாட்கள் இந்த திட்டத்தை பயன்படுத்த முடியும்.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement