Difference Between Mobile Phone and Cell Phone in Tamil
முந்தைய காலகட்டத்தில் எல்லாம் போன் என்பதே மிகவும் அரிதான ஒன்றாக உள்ளது. அப்படி இருந்தாலும் கூட சில நபரிடம் மட்டும் தான் அதுவும் செல் போன் தான் இருக்கும். ஆனால் இந்த நவீன காலத்தை பொறுத்தவரை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் ஸ்மார்ட் போன் தான் பயன்படுத்துகிறார்கள். அதுவும் குறிப்பாக தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரம் முழுவதும் மொபைல் தான் உபயோகப்படுத்துகிறார்கள். இதுமாதிரி நாம் எல்லா நேரமும் மொபைல் பயன்படுத்துகிறோமே தவிர அதில் உள்ள மற்ற விஷயங்கள் அனைத்தும் நமக்கு தெளிவாக தெரிவது இல்லை. மேலும் அதனை நாம் ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு பார்க்கும் போது அதற்கு இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அதனால் ஒன்று நாம் மொபைல் போன் Vs செல் போன் இந்த இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:👇 https://bit.ly/3Bfc0Gl
செல் போன் என்றால் என்ன..?
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செல்கள் ஒன்றாக இணைந்து உருவாகும் முறையே செல்லுலார் நெட்வொர்க் ஆகும். இத்தகைய செல்லுலார் நெட்வொர்க்கின் கீழ் செயல்படும் அனைத்து போன்களும் செல் போன் என்று அழைக்கப்படுகிறது.
மொபைல் போன் என்றால் என்ன..?
ஒரு இடத்தில் இருந்து கொண்டு மற்றொரு இடத்தில் உள்ள ஒரு நபருடன் ஒயர்லஸ் முறையில் தகவலினை பகிர்ந்து கொள்ளும் முறையில் உருவாக்கப்பட்டது தான் மொபைல் போன் ஆகும். அதுபோல இத்தகைய மொபைல் போன் அனைத்தினையும் செல்போன் என்று அழைக்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது.
இதையும் படியுங்கள்👇👇
RAM -மிற்கும் ROM -மிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்னென்ன..
மொபைல் போன் Vs செல் போன் இந்த இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசங்கள்:
மொபைல் போன் | செல் போன் |
மொபைல் போன் பேட்டரி மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதால் இதனை நாம் எங்கு வேண்டுமானாமலும் பயன்படுத்தி கொள்ளலாம். | ஆனால் செல்போன் ஆனது செல்லுலார் நெட்வொர்க் மூலம் இயங்குவதால் குறிப்பிட்ட தூரத்தில் மட்டுமே பயன்படுத்திகொள்ள முடியும். |
இது முதன் முதலில் வானங்களில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. | இது முற்றிலும் தொழில்நுட்ப வளர்ச்சியினை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. |
மொபைல் போன் ஆனது ஒயர்லஸ் ஆகும். | இது ஒயர்லஸ் மற்றும் தொழிநுட்ப முறை ஆகும். |
இதனுடைய எடை குறைவாக இருக்கிறது. | இது அதிக எடையுடன் காணப்படுகிறது. |
மொபைல் என்ற வார்த்தை பிரிட்டனில் இருந்து வந்தது. | செல்போன் என்ற வார்த்தை ஆனது அமெரிக்காவில் இருந்து வந்தது. |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |