வாட்சப் யூஸ் பண்றவங்களுக்கு ஹேப்பி நியூஸ்..!

Advertisement

வாட்ஸப்பில் ஆதார், பான் கார்டு டவுன்லோடு செய்ய இதை மட்டும் பண்ணுங்க போதும்..! Download Identity Documents on WhatsApp in Tamil..!

இந்தியாவில் மிகவும் அத்தியாவசிய ஆவணங்களான ஆதார், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் வாட்சப் வழியாக நாம் மிக எளிதாக வீட்டில் இருந்தபடியே டவுன்லோட் செய்யலாம். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதில் முழுமையாக பிடித்து தெரிந்துகொள்வோம் வாங்க. மேலும் இந்த ஆதார் கார்டு, பான் கார்டு, டிரைவின் லைசன்ஸ் போன்ற முக்கிய ஆவணக்களை தேவைப்படும் இடங்களில் மொபைலில் PDF வடிவில் காண்பித்தாள் போதும் என்று மத்திய அரசு அறிவுறுத்து உள்ளது. அந்த வகையில் நாம் இந்த ஆவணங்களை வாட்ஸப்பில் டவுன்லோட் செய்யலாம் அது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

How to Download Identity Documents on WhatsApp in Tamil:DigiLocker

ஸ்டேப்: 1

முதலில் https://www.digilocker.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

ஸ்டேப்: 2

பின் அதில் SIGN UP என்பதில் உங்களது சுயவிவரங்களை உள்ளோட்டு உங்களுக்கான கணக்கை ஓபன் செய்ய வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நீங்க ஆபத்தில் இருக்கும் போது உங்களுடைய Smart Phone உங்களுக்கு உதவி செய்யும்..! அது எப்படினு தெரியுமா..?

ஸ்டேப்: 3

லாகின் ஆனவுடன் பான் கார்டு, ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களின் எண்களை வைத்து எளிய முறையில் பதிவேற்றம் செய்யலாம்.

ஸ்டேப்: 4

இப்படி சேமித்த பிறகு மீண்டும் இத்தளத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை. அதன் பிறகு நீங்கள் வாட்சப் மூலமாகவும் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

ஸ்டேப்: 5

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் +91-90131 51515 என்ற தொலைபேசி எண்ணை தங்களது மொபைல் போனில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ஸ்டேப்: 6

அதில் Menu என டைப் செய்த பிறகு வரும் செய்தியில் DigiLocker ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 7

பின்பு Yes என்பதை கிளிக் செய்து 12 டிஜிட்டல் ஆதார் எண்ணை டைப் செய்யவும்.

ஸ்டேப்: 8

அதன் பின் உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு OTP எண் அனுப்பப்படும் அதனை உள்ளிடவும். அவ்வளவு தான் இப்பொழுது உங்களு தேவைப்படும் ஆவணங்களை PDF வடிவில் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவித்துள்ளனர். இந்த வாட்சப் சேவையை பெற DigiLocker ல் ஆவணங்கள் பதிவேற்றம் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்க போனில் Message செய்யும் ஆப் இருக்கா..? அப்போ உடனே இந்த Settings மாத்திடுங்க..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 

 

Advertisement