ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..!

Employment registration renewal online

வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை எப்படி புதுப்பிப்பது (TN employment registration renewal online)

10th, +2, Degree மற்றும் PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை எப்படி புதுப்பிப்பது என்பதை பற்றி இப்போது நாம் இங்கு தெரிந்து கொள்வோம். பொதுவாக 10th, +2 படித்து முடிந்த உடனேயே அவர்கள் படித்த பள்ளியில் வேலைவாய்ப்பு அலுவலக அட்டையை பதிவு செய்து கொடுப்பார்கள். அதன்பிறகு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நாமேதான் அவற்றை புதுப்பிக்க வேண்டும். முன்பெல்லாம் வேலைவாய்ப்பு அலுவகளத்திற்கு நேராக சென்று தான் புதுப்பிக்க வேண்டும். ஆனால் இப்போது வேலைவாய்ப்பு அலுவலக அட்டையை புதுப்பிக்க நாம் அந்த அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை நாமே வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதுப்பிக்க முடியும். இதற்கென்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை ஐந்தே நிமிடத்தில்  நாம் புதுப்பித்துவிட முடியும்.

சரி இப்போது வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் எப்படி வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிப்பது என்பதை பற்றி இப்போது நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.

10th, +2, Degree மற்றும் PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி? (Employment Registration Online In Tamil)

ஆன்லைனில் வேலைவாய்ப்பு புதுப்பித்தல் முறை (Employment.tn.gov.in online registration renewal):-

Employment registration renewal online step: 1

10th, +2, Degree மற்றும் PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் Employment Registration Renewal செய்வதற்கு முதலில் tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.

இப்பொழுது Renewal செய்வதற்கு முதலில் உங்களுடைய User ID & Password கொடுத்து லாகின் செய்ய வேண்டும்.

உங்களுடைய Employment registration இரண்டு விதமாக செய்திருக்கலாம் ஒன்று வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேராக சென்று பதிவு செய்திருப்பீர்கள், மற்றொன்று முதல் பதிவை நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்திருக்கலாம்.

இவற்றில் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்கள், வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை எப்படி புதுப்பிப்பது என்பதை பார்ப்போம்.

தங்கள் முதல் முதலாக Employment registration செய்த போதே இதற்கென்றே செட் செய்த User ID & Password தெரிந்திருக்க வேண்டும். எனவே எந்த இன்ஸ்ட்டியூட்டில் பதிவு செய்திர்களோ இங்கேயே User ID & Password எழுதி வாங்குகொள்ளவும்.

TN velaivaaippu.gov.in tn employment online registration & renewal step: 2

இப்பொழுது வேலைவாய்ப்பு மைய இணையதளத்திற்கு சென்று உங்களுடைய User ID & Password கொடுத்து லாகின் செய்ய வேண்டும்.

லாகின் செய்தவுடன் மற்றோடு பேஜ் திறக்கப்படும், Update Profileல் என்பதை கிளிக் செய்தவுடன் Renewal என்ற ஆப்சன் வரும் அவற்றில் candidate Renewal என்பதை கிளிக் செய்யவேண்டும். இப்பொழுது மற்றொரு பேஜ் திறக்கப்படும். அவற்றில் தங்களுடைய பதிவு எண், தற்போதைய பதிவு நாள், பதிவாளரின் பெயர் போன்ற விவரங்களை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள Renewal என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அவ்வளவுதான் இப்பொழுது ரினீவல் ஆகிவிடும்.

Employment registration renewal செய்வதன் பயன்:

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 3 வருடத்திற்கு ஒருமுறை பதிவு செய்வது என்பது மிகவும் அவசியம். திடீரென உங்களுக்கு தமிழ்நாடு அரசாங்கத்தில் வேலைகிடைத்துவிட்டது என்றால் அப்பொழுது உங்களுக்கு இந்த வேலைவாய்ப்பு பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..!