Google Chrome ஆப்பில் இந்த Settings எல்லாம் ON -ல இருந்தா அதை உடனே OFF செஞ்சி வச்சிடுங்க..!

Advertisement

Google Chrome Tricks

இன்றைய பதிவில் Google Chrome ஆப்பில் மாற்ற வேண்டிய Settings பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த காலகட்டத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் போன் இல்லாமல் வாழவே முடியாது என்ற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அதுபோல நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் எத்தனையோ நல்ல விஷயங்களும் இருக்கிறது, தீமைகளும் இருக்கிறது. இது இரண்டுமே நாம் போனை பயன்படுத்தும் விதத்தில் தான் இருக்கிறது. அந்த வகையில் ஸ்மார்ட் போன் அனைத்திலும் Google Chrome ஆப் கட்டாயம் இருக்கும். அந்த ஆப்பில்  மாற்ற வேண்டிய Settings பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Google Chrome Tricks in Tamil:

Settings -1 

முதலில் உங்கள் போனில் இருக்கும் Google Chrome ஆப் உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் மேலே 3 புள்ளிகள் போன்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து அதில் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Safety Check

பிறகு கீழே Safety Check என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும். பின் அதில் 3 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும்.

Check Now

அந்த 3 ஆப்சனும் டிக் செய்திருக்கிறதா என்று பார்த்து கொள்ளுங்கள். அதற்கு கீழே Check Now என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

 அப்படி அந்த 3 ஆப்சனும் டிக் செய்யப்படவில்லை என்றால், எந்த ஆப்சன் டிக் செய்யவில்லையே அதை கிளிக் செய்து Update செய்ய வேண்டும். இதுபோல செய்வதால் உங்கள் Google Chrome மற்றும் Google சம்மந்தப்பட்ட ஆப்கள் அனைத்தும் Safe ஆக இருக்கும்.  
Google Chrome-ல் இவ்ளோ Tricks இருக்கா..! இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!

Settings -2 

உங்கள் போன் Google Chrome -ல் Settings என்ற ஆப்சன் உள்ளே செல்ல வேண்டும்.

Notification

பின் அதன் கீழே Notification என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளவும்.

Show Notification

அதில் Show Notification என்ற ஆப்ஷன் ON செய்யப்பட்டிருந்தால் அதை OFF செய்து கொள்ளுங்கள்.

 இதுபோல செய்வதால் உங்கள் போன் பேட்டரி மற்றும் டேட்டா Save ஆக இருக்கும்.  
Google Chrome Setting -ல் மாற்ற வேண்டிய விஷயங்கள் என்ன..?

Settings -3 

Site Settings

Google Chrome -ல் Settings என்ற ஆப்சன் உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் கொஞ்சம் கீழே நகர்த்தி சென்றால் Site Settings என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.

Cookies

அதில் உள்ளே இருக்கும் Cookies என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளவும். அங்கு 4 ஆப்சன் கொடுக்கட்டிருக்கும். அதில் Allow Cookies என்ற ஆப்சன் ஆனில் இருந்தால் அதை OFF செய்துவிட்டு Block Third-Party Cookies என்பதை ON செய்து வைத்து கொள்ளுங்கள்.

Camera and Microphone

அதுபோல Site Settings இல் Camera மற்றும் Microphone என்ற ஆப்சன் Allow செய்யப்பட்டிருந்தால் அதை Block செய்து கொள்ளுங்கள்.

 இதுபோல இந்த ஆப்சன் Allow செய்யப்பட்டிருந்தால், உங்கள் போனில் Camera மற்றும் Microphone உங்களுக்கே தெரியாமல் தானாகவே இயங்கி கொண்டிருக்கும். அதனால் அதை Block செய்து கொள்ளவும்.  
Google Photos ஆப் Use பண்றவங்களா நீங்க..? அப்போ கண்டிப்பா இந்த Settings பற்றி தெரிஞ்சிக்கோங்க..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 
Advertisement