Google Chrome Setting in Tamil
வணக்கம் அன்பான நேயர்களே… இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இன்றைய கால கட்டம் முழுவதும் ஸ்மார்ட் போனில் தான் செயல்படுகிறது. அது நம் அனைவருக்குமே தெரியும்.
ஸ்மார்ட் போன் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். ஸ்மார்ட் போன்களின் செயல்பாடுகள் தீவிரமாக பயன்பட்டு வருகிறது என்று கூறலாம். நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதில் ஆபத்துகளும் உள்ளன.
ஸ்மார்ட் போன்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் இன்று நாம் இந்த பதிவின் மூலம் Google Chrome Setting -ல் சில தகவல்கள் மாற்றுவதை பற்றி தெரிந்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
எந்த விதமான ஆப்பும் ஏற்றாமல் வாட்ஸ் அப் டிபி போட்டோவை தெரிந்தவர்களுக்கு மட்டும் காட்டும் படி வைக்கலாம் |
Google Chrome Safety Setting in Tamil:
நாம் பயன்படுத்தும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் Google Chrome கட்டாயம் இருக்கும். அந்த Google Chrome Setting -ல் சில விஷயங்களை நாம் கட்டாயம் மற்ற வேண்டும்.
நாம் ஸ்மார்ட் போன் வாங்கியதில் Chrome Setting -ல் சிலவற்றை மாற்றாமல் வைத்திருப்போம். அதனால் நம் போனில் இருக்கும் தகவல்களை மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
அதனால் Setting-ல் நாம் மாற்ற வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
ஸ்டெப் -1
- முதலில் உங்கள் Chrome Setting யை கிளிக் செய்யுங்கள். அதன் மேல் 3 புள்ளிகள் இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.
- பின் அதில் Setting என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின் அதில் கீழே நகர்த்தி சென்று privacy and security என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு “Safe Browsing“என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- பின் அதில் 3 ஆப்சன் தோன்றும். அதில் முதல் மற்றும் மூன்றாவது ஆப்சன் டிக் செய்து இருந்தால் அந்த டிக்கை எடுத்து விடுங்கள்.
- 2 ஆவது ஆப்ஷனை மட்டும் டிக் செய்து கொள்ளுங்கள். இதனால் உங்களின் தகவல்கள் பகிராமல் இருக்கும்.
ஸ்டெப் -2
- பின் அதே Chrome Setting யை கிளிக் செய்து அந்த 3 புள்ளிகளை கிளிக் செய்யுங்கள்.
- பின் அதே Setting -ல் privacy and security என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பின் அதன் கீழே “Do Not Track” என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- அந்த ஆப்சன் Off செய்து இருந்தால் அதை On செய்து வைத்து கொள்ளுங்கள்.
- இதனால் உங்களின் செய்திகளை மற்றவர்கள் தெரிந்து கொள்ள முடியாது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |