Google Map Safety Settings in Tamil
இன்றைய பதிவு ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இன்றைய நிலையில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. நாம் ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் விதத்தை வைத்து தான் அது நமக்கு நல்லதா..? கெட்டதா..? என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஸ்மார்ட் போன் வந்ததில் இருந்து அனைவரின் கைகளிலும் உலகம் இருக்கிறது என்று சொல்லலாம்.
நாம் பயன்படுத்தும் போனின் மூலம் இந்த உலகில் நடக்கும் தகவல்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் Google Map ஆப் அனைத்து Smart Phone -லும் இருக்கும். அதில் இருக்கும் இந்த Settings உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவை முழுமையாக படித்து அந்த Settings -யை தெரிந்து கொள்ளுங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Google Map Settings -1
வெளியில் செல்லும் போது நாம் சென்ற சில இடங்கள் மட்டும் நமக்கு நியாபகம் இருக்கும். சில இடங்கள் நியாபகம் இருக்காது. ஆனால் நம்முடைய ஸ்மார்ட் போன் நாம் எந்த இடத்திற்கு சென்றோம் என்பதை Save செய்து வைத்திருக்கும். அது உங்களுக்கு தெரியுமா..? நாம் 10 நாட்களுக்கு முன் எந்த ஊரில் இருந்தோம், இப்போது எந்த ஊரில் இருக்கின்றோம் என்பதை Save செய்து வைத்து கொள்ளும். அந்த ஆப்சன் இங்க தான் இருக்கு வாங்க.
ஸ்டேப் -1
முதலில் உங்களுடைய Google Map உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் கீழே Saved என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளி செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
அதில் உள்ளே Time Line என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
ஸ்டேப் -3
அதில் நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள் என்று காட்டும். அதேபோல அதில் நீங்கள் எந்த தேதியை வேண்டுமானாலும் கிளிக் செய்து எந்த இடத்தில் இருந்தீர்கள் என்று பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
உங்க போனில் Google Map இருக்கா..? அப்போ இந்த Tricks பற்றி தெரிஞ்சிக்கோங்க..! |
Google Map Settings -2
மேலும் நீங்கள் செல்லும் இடங்களை Google Map மூலம் மற்றவர்கள் தெரிந்து கொள்ள கூடாது என்றால், அந்த Settings -யை நாம் OFF செய்து வைத்து கொள்ளலாம்.
ஸ்டேப் – 1
Google Map ஆப் உள்ளே சென்று Time Line என்ற ஆப்ஸனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
அதில் மேலே 3 புள்ளிகள் போன்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
பின் அதில் Settings & Privacy என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -4
அதில் கீழே நகர்த்தி சென்றால் Location History Is On என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்தால் உங்களுடைய Email ID கேட்கும்.
ஸ்டேப் -5
அதில் உங்களுடைய Email Id -யை கொடுத்தால் ஒரு திரை தோன்றும். அதில் Location History என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து அந்த ஆப்ஷனை OFF செய்து கொள்ளுங்கள்.
இந்த ஆப்ஷனை நீங்கள் ஆப் செய்வதால் உங்களுடைய Location இனி Save ஆகாது.Google Chrome Setting -ல் மாற்ற வேண்டிய விஷயங்கள் என்ன..? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |