G Pay -ல இவ்வளவு விஷயம் இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம தான் G Pay யூஸ் பண்ணிட்டு இருக்கோமா..?

Advertisement

G Pay Security Settings in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய நிலையில் ஸ்மார்ட் போன் அனைவருக்கும் பயன்படும் ஒரு தொழில்நுட்பமாக செயல்படுகிறது. நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் பல வசதிகள் இருக்கின்றன.

ஸ்மார்ட் போன் மூலம் அனைவருக்கும் பயன்படும் ஒரு வசதி தான் G Pay. மொபைலில் ஆன்லைன் மூலம் G Pay பயன்படுத்தி யாருக்கு வேண்டுமானாலும், எங்கிருந்தும் பணம் அனுப்ப முடியும். இப்படி G Pay மூலம் பணம் அனுப்புவதற்கு எந்த கட்டணமும் தேவை இல்லை. அதுபோல இந்த நிலையில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும் G Pay பயன்படுத்துகிறார்கள். G Pay App பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் பாருங்கள் –>Truecaller-ல இவ்வளவு Tricks இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!

Google Pay Safety Settings in Tamil:

Tips – 1

Allow People to find you

  1. முதலில் உங்களுடைய Google Pay ஆப் உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  2. அதில் Privacy & Security என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
  3. பின்பு அதில் Allow People to find you என்ற ஆப்சன் இருக்கும். அது OFF செய்து இருந்தால் அதை On செய்யுங்கள்.
  4. இதனால் உங்களுடைய Accountக்கு  யார் வேண்டுமானாலும் Google Pay க்கு பணம் அனுப்ப முடியும். அதாவது உங்களுடைய Profile லானது அனைவருக்கும் காட்டும் அதன் மூலம் அவர்கள் ஈசியாக உங்களுடைய Account என்பதை உறுதி செய்ய முடியும்.

Tips – 2 

Allow People to Add You to groups

அடுத்து Google Pay- ல் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

பின்பு அதில் Privacy & Security என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் Allow People to Add You to groups என்ற ஆப்சன் இருக்கும்.

அந்த ஆப்சன் OFF செய்யப்பட்டிருந்தால் அதையும் On செய்து கொள்ளுங்கள்.

இதனால் உங்களுடைய Google Pay Account -யை குரூப்பில் Add செய்வதற்கு வசதியாக இருக்கும். அதாவது, இதனால் உங்களுடைய Contact மற்றவர்களிடம்  இல்லையென்றாலும், அவர்களால் இதன் மூலம் உங்களை ஒரு குழுவில் சேர்க்க முடியும்.

Tips – 3

Lock Google Pay

அதேபோல உங்களுடைய Google Pay– ல் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர், அதில் ஆறாவதாக Lock App என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் Lock Google Pay என்ற ஆப்சன் தோன்றும். அதன் கீழ் Lock App என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இதனால், நீங்கள் G Pay பயன்படுத்தி விட்டு வெளியே சென்று, மறுபடியும் உள்ளே சென்றால் அது Password கேட்கும். இதனால் உங்களை தவிர யாராலும் உங்களுடைய G Pay App -யை பயன்படுத்த முடியாது.

எப்பொழுதும் உங்கள் Mobile டேட்டாவை On -யில் வைத்திருக்கிறீர்களா..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 
Advertisement