Gpay User Name Change in Tamil
தினமும் இந்த பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்றைய நிலையில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவருமே Google Pay, Phone Pe, Paytm போன்ற ஆப்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் அவர்கள் போனிலிருந்து பணப் பரிவர்த்தனை செய்கின்றார்கள். நாம் இந்த பதிவின் மூலம் Gpay -இல் இருக்கும் பல Tricks மற்றும் Settings பற்றி தெரிந்து கொண்டிருப்போம்.
அந்த வகையில் இன்று இந்த பதிவின் மூலம் Google Pay -இல் User Name -யை மாற்றுவது எப்படி என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். Google Pay -இல் எத்தனையோ ஆப்சன் இருந்தாலும், அதில் பெயர் மாற்றுவதற்கான ஆப்சன் மட்டும் கிடையாது. அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து Google Pay -இல் பெயர் மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How To Change User Name In Google Pay:
ஸ்டேப் -1
முதலில் உங்களுடைய போனில் Google ஆப் உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் மேலே இருக்கும் உங்களுடைய Profile Picture -யை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -2
பிறகு அதில் மேலே இருக்கும் Manage Your Google Account என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -3
பின் அதில் Home என்ற ஆப்சனுக்கு பக்கத்தில் Personal Info என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
Gpay -ல் Email ID -யை மாற்ற வேண்டுமா..? அப்போ இப்படி செய்யுங்க..! |
ஸ்டேப் -4
பிறகு அதில் உள்ளே சென்றால் அங்கு பல ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் கீழே நகர்த்தி சென்றால் Name என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -5
பின் அதில் Name மற்றும் Nick Name என்று 2 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Name என்ற ஆப்சனில் உங்களுக்கு என்ன பெயர் மாற்ற போகிறீர்களா அந்த பெயரை கொடுத்து கீழே இருக்கும் Save என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -6
அவ்வளவு தான் நண்பர்களே..! இப்பொழுது உங்களுடைய Google Pay -ல் உங்களுடைய பெயர் மாற்றப்பட்டு இருக்கும். சிலர் போனில் பெயர் மாறுவதற்கு சில நேரம் கூட ஆகலாம். அதனால் பயப்பட தேவையில்லை. சிறிது நேரம் கழித்து Gpay உள்ளே சென்றால் பெயர் மாற்றப்பட்டு இருக்கும்.
எந்தவித ஆப்பும் ஏற்றாமல் G pay -யில் Transaction History -யை ஈசியாக Delete செய்வது எப்படி..? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |