இன்ஸ்டாகிராமில் உங்களுடைய Likes, Views யாருக்கும் காட்டாதபடி மறைக்க முடியும்

can you hide likes and views on instagram in tamil

இன்ஸ்டாவில்  போஸ்ட் லைக்ஸ் மற்றும் வீவ்ஸ் மறைப்பது எப்படி.?

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் எல்லோருக்கும் ஒரு பயனுள்ள தகவலை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இன்றைய காலகட்டத்தில் அதிகமாக பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளங்களில் இன்ஸ்டாகிராமும் ஒன்று. இந்த இன்ஸ்டாகிராம் மூலம்  பிரபலமானவர்கள் பல பேர் இருக்கிறார்கள். அதோடுமட்டுமின்றி பல புதிய கருத்துக்களும், இன்று உலகில் என்ன நடக்கிறது என்பதனை பற்றியும் இதில் அறிந்துகொள்வதற்கு இவை அதிகமாக பயன்படுத்துகின்றன.

இதில் நம்முடைய புகை படம், வீடியோ என்று போஸ்ட் அல்லது ரீல்ஸ் செய்வார்கள். இதற்கு உங்களுடைய நண்பர்கள் என பலரும் லைக் செய்வார்கள். இதை மற்றவர்களுக்கு காட்டாதது போல செட்டிங்ஸ் இல் மாற்றிக்கொள்ளலாம். மேலும் இன்ஸ்டாகிராமில் உள்ள  போஸ்ட் லைக்ஸ் மற்றும் வீவ்ஸ் எப்படி மறைப்பது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

உங்களது WHATSAPP DP-யை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்பது தெரியுமா.?

Hide Likes and Views on Instagram in Tamil:

உங்களுடைய இன்ஸ்டாவில் போஸ்ட் போடும் பொழுது வியூஸ் மற்றும் லைக்கை எப்படி மறைப்பது என்று தெரிந்துகொள்ளலாம்.

ஸ்டேப்:1

 hide likes and views on instagram in tamil

 

முதலில் உங்களுடைய இன்ஸ்டாவை ஓபன் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுடைய ஐடி ஓபன் ஆனதும்  மேலே இருக்கும் [+] என்பதை கிளிக் செய்துகொள்ள வேண்டும்.

ஸ்டேப்:2

 

[+] என்பதை கிளிக் செய்ததும் உங்களுடைய புகைப்படங்கள் இருக்கும். நீங்கள் இன்ஸ்டாவில் எதை போஸ்ட்டாக போடப்போகிறீர்களோ அதை கிளிக் செய்துகொண்டு —> மேல் இருக்கும் அம்புக்குறியை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்:3

அடுத்ததாக New Post என்ற ஓரு பேஜ் ஓபன் ஆகும். அதில் நீங்கள் உங்களுடைய போஸ்ட்கான Songs, Location போன்றவற்றை வைத்த பிறகு, அதற்கு கீழ் கடைசியில் இருக்கும் Advanced Settings  என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொண்டு. அதில் முதலில் இருக்கும் Hide Likes Views Counts on This  Post என்பதை ON  செய்து கொள்ள வேண்டும்.  இப்பொழுது உங்களுடைய இன்ஸ்டா போஸ்ட்கான  Likes, Views மறைக்கப்படும்.

ஸ்டேப்:4

நீங்கள் ஏற்கனவே போட்டிருக்கும் புகைப்படங்களின் லைக்ஸ், வியூஸ் மறைப்பதற்கு உங்களுடைய ஐடியில் சென்று நீங்கள் லைக் மறைப்பதற்கான புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக உங்களுடைய புகைப்படத்தின் மேல் இருக்கும் மூன்று புள்ளியை கிளிக் செய்து கொள்ள வேண்டும். அதில் Hide Like Count என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய  லைக் Count மறைக்கப்படும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News