Online மூலமாக SBI Net Banking ஆக்டிவேட் செய்வது எப்படி? – How to Activate Net Banking for SBI in Tamil
How to Activate Net Banking for SBI in Tamil – பொதுவாக நாம் SBI Account எங்கு வைத்துள்ளோமோ அங்கு சென்று அந்த வங்கி மூலமாக SBI Net Banking ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். இருந்தாலும் அதற்கான Process என்பது கொஞ்சம் நிறைய இருக்கும். சில சமையம் சர்வரும் சரியாக செயல்படாது. அதேபோல் இந்த Net Banking-யின் User Name and Password-ஐ SBI வங்கி Pre-Printed Kit மூலமாக உங்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள். அல்லது வங்கிக்கு வந்து நேரடியாக வாங்கிக்கொள்ள சொல்வார்கள். ஆக பேங்க் மூலமாக நீங்கள் SBI Net Banking ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்றால் இதற்கான செயல்முறை கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை இருக்கும். அதுவே SBI-யின் இணையதளம் மூலமாக ஆக்டிவேட் செய்தால் வெறும் 10 நிமிடத்தில் SBI Net Banking-யின் User Name and Password-ஐ நீங்கள் கிரியேட் செய்ய முடியும். சரி வாங்க அது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம்.
SBI Net Banking Register Online in Tamil
ஸ்டேப்: 1
முதலில் https://www.onlinesbi.sbi/ என்ற இனையதளத்திற்கு செல்லவும்.
ஸ்டேப்: 2
பின் அதில் Personal Banking என்பதற்கு கீழ் இருக்கும் New User Registration என்பதை கிளிக் செய்யுங்கள்.
இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
பான் கார்டில் ஆன்லைன் மூலம் பெயர் மாற்றம் செய்வது எப்படி?
ஸ்டேப்: 3
இப்பொழுது உங்களுக்கு மேல் படித்ததில் காட்டப்பட்டுள்ளது போல் ஒரு Instruction வரும். அவற்றில் ok என்பதை கிளிக் செய்யுங்கள். (குறிப்பு: இவற்றில் நீங்கள் SBI வங்கியில் ஏற்கனவே Pre-Printed Kit வாங்கிருந்தால் இந்த இணையதளத்தில் பயன்பெற முடியாது.)
ஸ்டேப்: 4
பிறகு மேல் படத்தில் காட்டியுள்ளது போல் ஒரு பேஜ் திறக்கப்படும் அதில் செப்ரெட்டாக New User Registration என்று இருக்கும். ஆக Next என்பதை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்: 5
Next என்பதை கிளிக் செய்த பிறகு மேல் காட்டப்பட்டுள்ளது போல் ஒரு பேஜ் திறக்கப்படும் அதில் உங்களது Account Number, CIF Number, Branch Code, Country, Registered mobile Number, Facility Required, Enter the text as shown in the image ஆகிய விவரங்கள் கேட்கப்படும். ஆக அவற்றில் உள்ள விவரங்களை சரியாக உள்ளிட்டு I Agree என்பதை கிளிக் செய்து Submit என்பதை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்: 6
அதன் பிறகு உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும் அதனை Enter the one time password (OTP) என்ற இடத்தில் உள்ளிட்டு Confirm என்பதை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்: 7
Registration process-க்காக உங்களிடம் ATM கார்டு இருக்கா இல்லையா என்று கேட்கும். கட்டாயம் உங்களிடம் ATM கார்டு இருக்க வேண்டும். ஆக I have my ATM card என்ற ஆப்ஷனை Select செய்து Submit என்பதை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்: 8
அடுத்ததாக ஒரு பக்கம் திறக்கப்படும் அவற்றில் உங்கள் Debit Card-யின் விவரங்களை கொடுக்க வேண்டும். Card Number, Valid Thru/ Expiry Date, Cad Holders Name, ATM PIN மற்றும் கேப்சா கோட் ஆகியவற்றை உள்ளிட்டு Proceed என்பதை கிளிக் செய்யுங்கள்.
இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
ஓட்டுநர் உரிமத்தை ஆதாருடன் இணைப்பது எப்படி?
ஸ்டேப்: 9
பிறகு மற்றொரு பேஜ் திறக்கப்படும் அதில் Username and Password-ஐ கிரியேட் செய்ய வேண்டும். உங்களுக்கான Username and Password-ஐ கொடுத்த பிறகு Submit என்பதை கிளிக் செய்யுங்கள். Submit என்பதை கிளிக் செய்த பிறகு Successfully registered for Internet Banking என்று வரும். பிறகு Clos என்பதை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்: 10
அடுத்ததாக நீங்கள் profile password செட் செய்ய வேண்டும். இந்த Profile Password எதற்கு என்றால் பணம் ட்ரான்ஸாக்ஷன் செய்வதற்கு இந்த Profile Password அவசியம் தேவைப்படும். ஆக Clos என்பதை கிளிக் செய்த பிறகு Profile Password பேஜிக்கு Redirect ஆகும். அங்கு கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை உள்ளிட்டு Submit என்பதை கிளிக் செய்தீர்கள் என்றால். உங்களுக்கான profile password கிரியேட் ஆகிவிடும். இப்பொழுது உங்களது Internet Banking முழுமையாக கிரியேட் ஆகியிருக்கும்.
குறிப்பு: User Name, Password மற்றும் profile password மூன்றையும் நோட் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த மூன்றுமே உங்களுக்கு அவசியம் தேவைப்படும் ஆக அதனை நோட் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |