Lost Document Report Download in Tamil
முதலில் இந்த LDR என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம். LDR என்றால் Lost Document Report ஆகும். இந்த LDR என்றால் உங்களுடைய TC, ட்ரேவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட், ஸ்கூல் ஆவணம் தொலைந்துவிட்டது என்றால், அதனை அப்ளை செய்வதற்கு முன்பு FIR Copy கொடுத்தால் மட்டுமே அப்ளை செய்ய முடியும். ஆனால் இப்போது அப்படி இல்லை அதற்கு பதிலாக தான் இந்த Lost Document Report அப்ளை செய்ய சொல்கிறார்கள். சரி இப்போது உங்களுக்கு எப்படி இந்த Lost Document Report அப்ளை செய்வது என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க..!
Lost Document Report Download in Tamil:
ஸ்டேப்: 1
இதனை உங்கள் போன் அல்லது கம்ப்யூட்டர் மூலம் அப்ளை செய்துகொள்ள முடியும். முதலில் நீங்கள் Browser செல்லவும்.
ஸ்டேப்: 2
அதில் tn.police என்பதை Type செய்யவும். அதில் முதலில் வரும் ஆஃப்ஷன் கிளிக் செய்யவேண்டும்.

அதன் பின் அதில் Home Page ஓபன் ஆகும். அதில் Citizen Service Paid ஆப்சன் இருக்கும். அதனை கிளிக் செய்யவேண்டும்.
ஸ்டேப்: 3

அந்த Citizen Service Paid என்பதை கிளிக் செய்தால் அதில் நிறைய ஆப்சன் இருக்கும். அதில் Lost Document Report என்பதை கிளிக் செய்யவேண்டும்.
ஸ்டேப்: 4
அதன் பின் உங்களுக்கு ஒரு திரை காணப்படும். அதில் முதல் அப்சனில் Report என்பது காணப்படும். அதனை கிளிக் செய்யவேண்டும்.
ஸ்டேப்: 5
பின்பு அதில் Kind Attention Please என்பது காணப்படும். While availing paid services, if your payment has gone through successfully, your application will be processed in a couple of days. Kindly refrain from multiple attempts என்பது காணப்படும். அதில் கீழ் இருக்கும் Proceed என்பதை கிளிக் செய்யவேண்டும்.
ஸ்டேப்: 6

அடுத்து உங்களுக்கு புதிதாக திரை காணப்படும். அதில் Lost Document Report என்று கொடுக்கப்பட்டு அதில் கேட்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் கொடுத்துவிட்டு SEND OTP என்பதை கிளிக் செய்யவேண்டும்.
ஸ்டேப்: 7

அடுத்து புதிதாக ஒரு திரை காணப்படும். அதில் OTP என்ற இடத்தில் OTP –யை உள்ளிடவும். அதன் பின்பு Secure code என்பதை சரியாக உள்ளிடவும். Submit என்பதை கிளிக் செய்யவேண்டும்.
ஸ்டேப்: 8

அடுத்து ஒரு PAGE காணப்படும். Details of Lost Documents கேட்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு என்ன தொலைந்து உள்ளதோ அதனை பற்றிய விவரம் கேட்கப்பட்டிருக்கும். அதில் முதலில் என்ன ஆவணம் தொலைத்துள்ளது என்பது கேட்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.
நிறைய Photos-ஐ ஒரே PDF File-யில் கன்வெர்ட் செய்வது எப்படி?
ஸ்டேப்: 9
அடுத்து DATE OF LOSS என்ற இடத்தில் எங்கு எந்த நாளில் தொலைந்தது என்பதை கிளிக் செய்து தேதி தேர்வு செய்யவும்.
ஸ்டேப்: 10

அடுத்து அதற்கு கீழ் தொலைந்த நேரம் தெரிந்தால் அதையும் உள்ளிடவும். அடுத்து அதற்கு கீழ் Place of Occurrence என்ற இடத்தில் எங்கு தொலைந்தது என்பதை Type செய்யவும்.
அடுத்து District என்ற இடத்தில் எந்த இடத்தில் தொலைத்தீர்கள் என்பதை தெரிந்துகொண்டு அதில் தொலைந்த மாவட்டத்தை Type செய்யவும்.
அடுத்து உங்கள் ஆவணம் என்னவோ அதற்கு தகுந்த விவரம் கேட்கப்பட்டிருக்கும். அதனை சரியாக அப்ளை செய்யவும். அதன் பின் கீழ் Make Your Payment என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 11
அடுத்து புதிதாக திரை காணப்படும். அதில் மேல் பக்கம் Attention என்பது கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்கள் Credit Card அல்லது Net Banking மூலம் மட்டும் பணத்தை செலுத்த முடியும் என்று விவரம் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதற்கு பின் நீங்கள் அளித்த விவரம் மறுமுறை காணப்படும். அதனை சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்துவிட்டு இதற்கு 50 ரூபாய் செலுத்துவது போல் இருக்கும். அதன் பின் கீழ் Proceed என்பதை கிளிக் செய்யவேண்டும்.
ஸ்டேப்: 12
அடுத்து New page காணப்படும். அதில் முன்பு சொல்வது போல் இரண்டு விதமாக பணத்தை அனுப்ப முடியும். அதில் இரண்டு ஆப்சன் காணப்படும். உங்களுக்கு எது மூலம் செலுத்த முடியுமோ அதன் மூலம் செலுத்திக் கொள்ளலாம்.
அதன் பின்பு புதிய திரையில் Payment Made Successfully என்று காணப்படும். அதில் மேல்பக்கம் LDR நம்பர் என்று காணப்படும். அதனை SAVE செய்து கொள்ளவும்.
அதன் பின்பு UPLOAD FILE என்பதில் உங்களுடைய தொலைந்த ஆவணத்தின் நகல் இருந்தால் அதனை 200 KB FORMENT JPEG -குள் அப்ளை உள்ளிடவும்.
அப்படி எதுவும் இல்லை இல்லையென்றால் அங்கு வேற ஏதாவது ஆதாரம் அதில் உள்ளிடுவது போல் இருக்கும். அதன் பின் கடைசியில் Proceed கொடுக்கவேண்டும். அதன் பின் உங்களுக்கு LDR Report வந்துவிடும்.
அதனை Download செய்து கொள்ளலாம். அதற்கு கீழ் Print ஆப்சன் இருக்கும். அதனை கிளிக் செய்து SAVE செய்து வைத்து கொள்ளலாம்.
தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 Online மூலமாக SBI Net Banking ஆக்டிவேட் செய்வது எப்படி?
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |














