How to Block Spam Calls on Android Phone
ஆரம்ப காலத்தில் எல்லாம் போன் என்பது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஏதேனும் முக்கியமான தகவலை தெரியப்படுத்தும் ஒரு முறையாக இருந்தது. ஆனால் இவற்றை எல்லாம் கலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சம் என மாற்றம் அடைந்து இப்போது முற்றிலும் பெரிய அளவில் மாற்றத்தினை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக நாம் பயன்படுத்தும் முறை என்னவோ அதனை பொறுத்து தான் நமக்கான நன்மை மற்றும் தீமை இரண்டும் அமைகிறது. அந்த வகையில் நமக்கு வரும் அழைப்புகளில் தெரிந்த அழைப்பினை விட தெரியாத அழைப்புகள் தான் அதிகமாக இருக்கிறது.
அதோடுமட்டும் இல்லாமல் நாம் தெரியாமல் அழைப்பினை On செய்து பேசினால் நம்முடைய தகவ்கள் அனைத்தும் அவர்களுக்கு கிடைத்து விடும் என்றும் கூறப்படுகிறது. அதாவது Hack செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் இந்த Spam Calls வராமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்வது என்ற குழப்பம் மற்றும் சிந்தனை எல்லோருக்குமே இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவானது மிகவும் பயனளிக்கும் வகையில் இருக்கும். ஏனென்றால் இன்று நம்முடைய மொபைலிற்கு வரும் Spam காலினை வராமல் செய்தல் மற்றும் அதனை எப்படி Block செய்வது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
How to Stop Getting Spam Call:
ஸ்டேப்- 1
முதலில் உங்களுடைய மொபைலில் உள்ள Contact-ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
அதன் பிறகு அதில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து அதில் இருக்கும் Setting-ஐ கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்- 3
அடுத்ததாக அதில் உள்ள Caller ID & Spam என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து அதில் வரும் Filter Spam Calls என்பதை On செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலமாக உங்களுக்கு வரும் Spam Calls -ஐ வராமல் தடுக்க செய்யும்.
ஸ்டேப்- 4
இதனை தொடர்ந்து உங்களுக்கு அடிக்கடி வரும் Spam Calls நம்பரை தேர்வு செய்து வழக்கம் போல் Block செய்து விடுங்கள்.
இதுமாதிரி செய்வதன் மூலம் Spam Calls பிரச்சனை ஆனது இருக்காது.
கண்டிப்பா தெரிஞ்சிக்க வேண்டிய 3 Android Tricks..
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |