ஆன்லைன் மூலம் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றுவது எப்படி..?

Advertisement

Aadhaar Card Photo Change Online in Tamil..!

வணக்கம் அன்பார்ந்த நேயர்களே… இன்றைய பதிவில் நம் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை ஆன்லைன் மூலம் மாற்றுவது எப்படி என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். மத்திய அரசின் மூலம் ஒரு தனி மனிதனின் அடையாளமாக வழங்கப்பட்டது தான் ஆதார் அட்டை.

ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் சிலருக்கு பிடிக்கவில்லை. ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற வேண்டும் என்பதை பலரின் விருப்பமாக உள்ளது. அந்த வகையில் ஆன்லைன் மூலம் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றுவது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க…

ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி..?

ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் மாற்றுவது எப்படி..? 

ஆதார் அட்டை ஒரு முக்கிய ஆவணமாக பயன்பட்டு வருகிறது. வங்கி மற்றும் வருமான வரி தாக்கல், வாக்காளர் அடையாள அட்டை, செல்போன் பயன்பாடு, ரயில் டிக்கெட் என நம் அனைத்து பயன்பாட்டிற்கும் ஆதார் ஒரு முக்கிய ஆவணமாக பயன்படுகிறது.

இந்த ஆதார் அட்டையில் நாம் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அத வீட்டில் இருந்தபடியே செய்யலாம். ஆதாரில் உள்ள புகைப்படம் பிடிக்காமல் மாற்ற வேண்டும் என நினைப்பவர்கள் வீட்டில் இருந்த படியே புகைப்படத்தை மாற்றம் செய்ய முடியும். அது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Step – 1

முதலில் UIDAI என்ற uidai.gov.in ஆதார் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

Step – 2

பின் அதில் Downloads என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் Aadhaar Enrollment Form என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

Step – 3

அதற்கான படிவம் தோன்றும். அந்த படிவத்தை படித்து சரியான முறையில் பூர்த்தி செய்ய வேண்டும்.

அந்த படிவத்தை Download செய்து அதை ஆதார் சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதார் சேவை மையத்தில் புதிய புகைப்படம் எடுக்கப்படும். அதற்கு தேவையான கட்டணம் செலுத்த வேண்டும்.

Step – 4

பின் உங்களுடைய ஆதரில் புகைப்படம் மாற்றம் செய்யப்படும். பின் சில நாட்களில் ஆதார் சேவை மையத்தில் சென்று உங்களுடைய புகைப்படம் மாற்றம் செய்த ஆதார் அட்டையை பெற்று கொள்ளலாம்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தொழில்நுட்ப செய்திகள்
Advertisement