How To Change ATM Pin if Forgotten in Tamil
இந்த காலத்தில் உள்ள அனைவரிடமும் ஏடிஎம் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஏடிஎம் கார்டிற்கும் ஒவ்வொரு பின் நம்பர் வழங்கப்பட்டு இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஏடிஎம் கார்டின் பின் நம்பரை மறந்து விட்டால் புதிய பின் நம்பர் வாங்க வங்கிக்கு செல்ல வேண்டியதில்லை. ஸ்மார்ட்போனிலோ அல்லது ஏடிஎம் இயந்திரத்தின் மூலமாகவோ புதிய பின் நம்பரை செட் செய்து கொள்ளலாம். எனவே அவற்றின் விவரங்களை பற்றித்தான் இப்பதிவில் பின்வருமாறு பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
ஏடிஎம் பின் நம்பர் மறந்துவிட்டால் எவ்வாறு புதிய நம்பர் பெறுவது..?
ஸ்டேப்- 1
முதலில் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கீர்களோ அந்த ATM இயந்திரத்திற்கு செல்லவேண்டும். பிறகு ATM மெஷினில் கார்டை செருகவும்.
ATM கார்டில் இந்த சிப் ஏன் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..
ஸ்டேப்- 2
இப்போது Forget Pin அல்லது Regenerate Atm Pin என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்- 3
பிறகு, திரையில் தோன்றும் உங்கள் வங்கி கணக்குடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் நம்பரை டைப் செய்ய வேண்டும்.
ஸ்டேப்- 4
மொபைல் நம்பரை பதிவிட்டதும் உங்கள் போனிற்கு OTP ஒன்று வரும். இந்த OTP நம்பரை ATM மெஷினில் டைப் செய்தால் புதிய ATM PIN நம்பர் வழங்கப்படும்.
ஆன்லைன் நெட்பேங்கிங்:
ஆன்லைன் நெட் பேங்கிங்கை தொடங்குவதற்கு, முதலில் வங்கியின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அப்பக்கத்தில் ஏடிஎம் கார்டு பகுதிக்கு சென்று உடனடி Pin உருவாக்கத்தை கிளிக் செய்யவும்.
பிறகு, அதில் வருடம், CVV போன்ற அனைத்து அட்டை விவரங்களையும் பதிவிட வேண்டும்.
அதன், பின் வங்கி கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை பதிவிடவும். இப்போது அந்த மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதன் பிறகு நீங்கள் புதிய பின் நம்பரை உருவாக்கலாம்.
மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு முறைகளில் எப்படி வேண்டுமானாலும் புதிய பின் நம்பரை உருவாக்கி கொள்ளலாம்.
ATM-யில் கார்ட் மற்றும் அக்கௌன்ட் நம்பர் மூலம் பணம் டெபாசிட் செய்வது எப்படி
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |