பான் கார்டில் பிழை இருந்தால் அதனை இவ்வளவு ஈசியாக சரி செய்யலாமா..?

Advertisement

How To Change Mistake in Pan Card in Tamil

Pan Card என்பது ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான ஒன்றாகும். PAN என்பதன் விரிவாக்கம் (Permanent Account Number) ஆகும். இது எண்கள் மற்றும் எழுத்தாலான 10 இலக்கங்கள் கொண்ட புகைப்பட அடையாள அட்டையாகும். பான் கார்டை இந்திய அரசின் நிதி அமைச்சகம் வழங்குகிறது. எனவே அனைவருமே பான் கார்டை பயன்படுத்தி வருகிறோம். அதில் ஏதாவது பிழைகள் இருந்தால் ஆன்லைனில் ஈசியாக திருத்துவது எப்படி என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:👇 https://bit.ly/3Bfc0Gl

Pan Card Correction Online in Tamil:

முதலில் பான் கார்டில் உள்ள பிழையை திருத்துவதற்கும் புது பான் கார்டு அப்ளை செய்வதற்கும் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

பிறகு இணையதள பக்கத்தில் உள்ள Application Type என்பதை தேர்ந்தெடுத்து Changes or Correction in Existing PAN card என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

 how to change mistake in pan card in tamil

அதன் பிறகு, அந்த இணையதள பக்கத்தில் உள்ள உங்கள் விவரங்களை பிழையில்லாமல் பூர்த்தி செய்து வேண்டும். பூர்த்தி செய்த பிறகு, ஒரு டோக்கன் எண் அளிக்கப்படும். இதனை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும், இந்த டோக்கன் எண் உங்களின் மின்னஞ்சலுக்கும் அனுப்பப்படும். எனவே மின்னஞ்சல் முகவரியை சரியாக கொடுக்க வேண்டும்.

இப்போது, பிழைகளை எல்லாம் திருத்தும் செய்த பிறகு, முகவரி மற்றும் அடையாள ஆவணங்கள் மற்றும் கையெழுத்து போன்ற விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்த முறைகளை எல்லாம் சரியாக முடித்த பிறகு விண்ணப்பத்தை சமர்ப்பித்து (Submit) கட்டணத்தை செலுத்தினால் போதும் பான் கார்டு பிழைகள் திருத்தும் செய்யப்பட்டு உங்கள் முகவரிக்கு வந்துவிடும்.

காணாமல் போன PAN Card -யை திரும்ப பெறுவது எப்படி..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement