Indian Bank Mobile Banking செயலில் MPIN மற்றும் MTPIN ஆகியவற்றை மாற்றம் செய்வது எப்படி..?

Advertisement

Indian Bank Mobile Banking செயலில் MPIN மற்றும் MTPIN ஆகியவற்றை Change செய்யவதற்கு வழிமுறைகள் இதோ..!

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க போவது ஒரு அருமையான தகவல் பற்றித்தான். இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் Mobile Banking மற்றும் net banking போன்றவற்றை பயன்படுத்தி பணபரிவர்தனையை மேற்கொள்ளுகிறோம். அப்படி பணபரிவர்தனையை மேற்கொள்ளும்போது சில சந்தேகங்கள் வரும்.

அப்படி Indian Bank Mobile Banking செயலியான Indoasis App இல் MPIN மற்றும் MTPIN ஆகியவற்றை எவ்வாறு Change செய்வது என்று இந்த செயலியை பயன் படுத்துபவர்களுக்கு சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கும். அதற்கான தெளிவான செயல்முறைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

MPIN மற்றும் MTPIN என்றால் என்ன ?

முதலில் நீங்கள் இந்தியன் வங்கியின் மொபைல் பேங்கிங் சேவையான Indoasis என்ற App-யை பயன்படுத்துபவர்களாக இருந்தால் இந்த செயலில் Login செய்வதற்கு பயன்படும் 4 இலக்க எண்களே MPIN (Mobile PIN) ஆகும்.

அப்படி நீங்கள் Login செய்து Indoasis செயலினுள் சென்ற பிறகு ஏதாவது ஒரு பணபரிவர்தனையை மேற்கொள்ளும்போது பயன்படும் 4 இலக்க எண்களே MTPIN (Mobile Transfer PIN) ஆகும்.

இந்த இரண்டு PIN நம்பர்களையும் Indoasis App-ல் Registration செய்யும்போது உருவாக்கியிருப்பீர்கள். அப்படி உருவாக்கிய இந்த இரண்டு PIN நம்பர்களையும் மாற்ற எண்ணுகிறீர்கள் என்றால் Indian Bank Mobile Banking செயலியின் மூலமாகவே மாற்றி கொள்ளலாம்.

இந்தியன் பேங்க் மொபைல் பேங்கிங் செயலியை Download செய்ய => Indoasis App Download     

MPIN மற்றும் MTPIN ஆகியவற்றை Change செய்யவதற்கு வழிமுறைகள்:

MPIN-Change செய்யவதற்கு வழிமுறைகள்:

ஸ்டேப்-1:

உங்களின் Indoasis செயலியை Login செய்யவும்.

ஸ்டேப்-2:

இப்பொழுது Mobile Banking செயலி Open ஆகும். அதில் Forgot pin என்பதை தேர்வு செய்க.

ஸ்டேப்-3:

அடுத்து Enter CIF Number என்று கேட்கும். அதில் உங்கள் CIF Number-யை Enter செய்யுங்கள்.

ஸ்டேப்-4:

CIF Number-யை Enter செய்த பிறகு Send SMS என்று காட்டும் அதனை கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப்-5:

Send SMS என்பதை கிளிக் செய்த பிறகு உங்கள் Mobile Number-யை தேர்வு செய்துக்கொள்ளுங்கள் முக்கியமாக எந்த Mobile Number-யை வங்கியில் அளித்திருக்கிறீர்களோ அந்த Mobile Number-யை கிளிக் செய்துகொள்ளுங்கள்.

ஸ்டேப் – 6:

அடுத்து உங்களுடை Verfying SMS என்று வரும்.

ஸ்டேப் – 7:

அடுத்து உங்கள் Mobile Number Verify முடித்தவுடன் Proceed என்பதை கிளிக் செய்யுங்கள்.

Proceed என்பதை கிளிக் செய்த பிறகு உங்களுடைய மொபைலுக்கு ஒரு Alert Message வரும் அதில் Ok என்பதை கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப் – 8:

அடுத்து MPIN-Change செய்யவதற்கு கிலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளதுபோல 3 Option இருக்கும்.

அதில் கேட்டிருக்கும் விவரங்களை கொடுக்கவும். அதன் பிறகு Activate என்பதை கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப் – 9:

Set MPIN என்ற இடத்தில உங்களுடைய புதிய MPIN நம்பரை உள்ளீடுங்கள். அடுத்து Proceed என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து Conform MPIN என்ற இடத்தில உங்களுடைய புதிய MPIN நம்பரை உள்ளீடுங்கள். பிறகு Submit என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுடைய MPIN change ஆகிவிடும்.

MTPIN-Change செய்யவதற்கு வழிமுறைகள்:

ஸ்டேப் – 1:

நீங்கள் MPIN-யை change செய்த பிறகு அதனுடனே தொடர்ந்து MTPIN-Change செய்வதற்கான வழிமுறைகள் அடுத்து தொடர்ந்து வரும் அதனை பயன்படுத்தி MTPIN-யை மாற்றிக் கொள்ளலாம்.

அந்த வழிமுறைகளில் முதலில் Set MTPIN என்ற இடத்தில உங்களுடைய புதிய MTPIN நம்பரை உள்ளீடுங்கள். அடுத்து Conform MTPIN என்ற இடத்திலும் உங்களுடைய புதிய MTPIN நம்பரை உள்ளீடு செய்த பிறகு Submit என்பதை கிளிக் செய்யுங்கள். 

ஸ்டேப் – 2:

Submit என்பதை கிளிக் செய்த பிறகு உங்களுடைய மொபைலுக்கு ஒரு Alert Message வரும் அதில் Ok என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது உங்களுடைய MPIN மற்றும் MTPIN ஆகிய இரண்டுமே Change ஆகிவிடும்.

இதையும் பாருங்கள் => SBI Internet Banking Password-ஐ Reset செய்ய வேண்டுமா? அதற்கான வழிமுறை இதோ..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement