How To Check Belt By Survey Number in Tamil
பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய சூழலில் நாம் அனைவரும் நிற்க கூட நேரம் இல்லாமல் ஓடி கொண்டிருப்பது பணத்திற்காக தான். காரணம் பணம் இருந்தால் மட்டும் தான் நம்மால் இவ்வுலகில் வாழவே முடியும். இந்த பணத்தால் தான் பல பிரச்சனைகளும் வருகிறது. அதாவது ஒரு குடும்பத்தில் 5 பிள்ளைகள் வளரும் வரை அன்பாகவும், பாசமாகவும் வளர்வார்கள். ஆனால் காலம் கடந்த பின் சொத்து பிரச்சனை என்ற ஒன்றினால், பிரிந்து விடுவார்கள். காரணம் பணம் தான்.
பொதுவாக நம்மில் பலரிடம் நிலம் என்பது இருக்கும். ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் பெரிய பிரச்சனை என்றால் அது சொத்து பிரச்சனை தான். சரி நாமும் சொத்து, பட்டா போன்ற தகவல்களை தினமும் நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் சர்வே எண் வைத்து பட்டா பார்ப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!
நத்தம் பட்டா ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்வது எப்படி..
சர்வே எண் வைத்து பட்டா பார்ப்பது எப்படி..?
பொதுவாக ஒரு இடத்திற்கு பட்டா என்பது மிகவும் முக்கியம். பட்டா இருந்தால் தான் அந்த இடம் யாருடையது என்பது நமக்கு தெரியும். அந்த பட்டாவை நாம் இப்போது ஆன்லைனிலே பார்த்து கொள்ளலாம்.
அந்த வகையில் இன்று சர்வே எண் வைத்து நம்முடைய பட்டாவை எப்படி பார்ப்பது என்று இப்போது பார்க்கலாம் வாங்க.
ஸ்டெப் -1:
முதலில் உங்கள் போனில் இருக்கும் Google Chrome உள்ளே செல்லுங்கள். பின் அதில் https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
ஸ்டெப் -2:
அதில் கீழே நகர்த்தி சென்றால் நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கும். அதில் பட்டா சிட்டா விவரங்களை பார்வையிட என்று இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
தொலைந்த சொத்து பத்திரத்தை ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி
ஸ்டெப் -3:
பின் புதிதாக ஒரு திரை தோன்றும். அதில் சில உங்களுடைய விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அதில் நீங்கள் உங்களுடைய விவரங்களை சரியாக கொடுக்க வேண்டும். அதாவது,
- உங்களுடைய மாவட்டத்தின் பெயர்
- நீங்கள் இருக்கும் வட்டத்தின் பெயர்
- கிராமத்தின் பெயர்
- பட்டா எண் அல்லது புல எண் அல்லது நிலத்தின் பெயர் – இதில் நீங்கள் புல எண்ணை கொடுக்க வேண்டும்.
- அடுத்து உங்கள் நிலத்தின் புல எண்
- மற்றும் உட்பிரிவு எண் கொடுக்க வேண்டும்.
ஸ்டெப் -4:
இறுதியாக கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் Captcha -வை டைப் செய்து சமர்ப்பி என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இதுபோல உங்கள் விவரங்களை நீங்கள் கொடுத்தால் உங்களுடைய சர்வே எண்ணை மட்டும் வைத்து பட்டாவை பார்த்து கொள்ளலாம்.
ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி..
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |